கராத்தே பாபு எங்களுக்கு வேண்டாம்... ஜகா வாங்கிய ஓடிடி நிறுவனம்..? ரூ.32 கோடி போச்சு...!
கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடித்துள்ள படம் கராத்தே பாபு, அப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஜீ5 நிறுவனம் திடீரென பின்வாங்கி உள்ளதாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

Karathey Babu OTT Deal Cancelled
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்பட தயாரிப்பாளர்களின் லாப–நஷ்ட கணக்கு முழுக்க முழுக்க திரையரங்குகளின் வசூலை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. தியேட்டர் கலெக்ஷனுடன் சேர்த்து, ஆடியோ உரிமம் மற்றும் சாட்டிலைட் சேனல் உரிமம் மூலம் கிடைக்கும் வருமானம்தான் அவர்களுக்கு கூடுதல் ஆதாரமாக இருந்தது.
ஆனால் ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு இந்த நிலைமை முழுமையாக மாறிவிட்டது. இப்போது ஒரு படத்தின் தயாரிப்பு செலவின் பெரும்பகுதியை ஈடுகட்டுவதோடு, பெரிய லாபத்தையும் தருவது டிஜிட்டல் உரிமம்தான்.
ஓடிடியின் ஆதிக்கம்
பல நேரங்களில் பட்ஜெட்டின் 60 முதல் 70 சதவீதம் வரை ஓடிடி ஒப்பந்தம் மூலமே தயாரிப்பாளர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதனால், ஓடிடி விற்பனைக்கு ஏற்ற வகையிலேயே படத்தின் பட்ஜெட்டும், திட்டமிடலும் அமைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த மாற்றத்தின் இன்னொரு பக்கம் என்னவென்றால், திரைப்படங்களின் வெளியீட்டு தேதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பெரும்பாலும் ஓடிடி நிறுவனங்களின் கைக்குச் சென்றுவிட்டது. ஒரே நேரத்தில் பல படங்களின் உரிமத்தை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள், தங்களது வசதிக்கேற்ப படங்களுக்கு ரிலீஸ் தேதிகளை ஒதுக்கி வருகின்றன. இதனால் சில படங்கள் ஓடிடி ஒப்பந்தம் கிடைக்காமல், திரைக்கு வர முடியாமல் நீண்ட நாட்கள் முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கராத்தே பாபுவுக்கு சிக்கல்
இத்தகைய சூழலில் நடிகர் ரவிமோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்னும் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படப்பிடிப்புக்கான கால்ஷீட்டை நடிகர் ரவி மோகன் தராமல் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்வாங்கிய ஜீ5
இதன் விளைவாக, ‘கராத்தே பாபு’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ.32 கோடி செலுத்தி வாங்கிய ஜீ5 ஓடிடி நிறுவனம், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவில் படம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. படம் இன்னும் முழுமையடையாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் படத்தை ஒப்படைக்க முடியாததால், இறுதியில் ஜீ5 நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இத்தனை கோடி போச்சா?
இதனால் ‘கராத்தே பாபு’ படத்தின் தயாரிப்பாளருக்கு ஓடிடி உரிமம் மூலமாக கிடைக்க வேண்டிய ரூ.32 கோடி வருமானம் முற்றிலும் பறிபோயுள்ளது. நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை, தயாரிப்பாளர்களை எவ்வளவு பெரிய நஷ்டத்தில் தள்ளுகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகியிருந்தால், இந்த அளவிலான இழப்பு ஏற்பட்டிருக்காது என்பதும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

