MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!

2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!

Chandrakala Steals Treasure Box in Karthigai Deepam Serial :கார்த்திகை தீபம் சீரியலில் திட்டமிட்டபடி சந்திரகலா புதையலை ஆட்டைய போட்ட நிலையில் அடுத்ததாக என்ன நடந்தது என்பது பற்றி 1136ஆவது எபிசோடில் ஹைலைட்சாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 03 2026, 07:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Zee Tamil Serial Updates.
Image Credit : Zee Tamil Serial

Zee Tamil Serial Updates.

அக்காவின் அறையில் பாதுகாப்பாக இருந்த புதையல் நகைகளை சந்திரகலா திட்டமிட்டபடி புத்திசாலித்தனமாக திருடிச் சென்று முத்துவேலுவிடம் கொடுத்தார். மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்ட புதையல் பாத்திரங்களை ஊரார் முன்னிலையில் திறந்து பார்த்த போது அதில் வெறும் கற்கள் தான் இருந்துள்ளன. அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி சுவாரஸ்யமாக பார்க்கலாம்.

25
Karthigai Deepam Latest Twist March 2026
Image Credit : Zee Tamil Serial

Karthigai Deepam Latest Twist March 2026

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 1136ஆவது எபிசோடில் புதையல் நகைகளை சந்திரகலா திருடிச் சென்றுள்ளார். அக்காவின் ரூமில் பத்திரமாக இருந்த நகைகளை யாருக்கும் தெரியாமல் தனியாக பேக் எடுத்து சென்று அதில் நகைகளை எடுத்து வைத்து முத்துவேலுவிடம் கொடுத்துள்ளார். மேலும், கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடத்தில் மறைத்து வைக்க முத்துவேலுவிடம் பிளான் போட்டு கொடுத்துள்ளார்.

35
Chamundeswari Panchayat Head Issue
Image Credit : Zee Tamil You Tube

Chamundeswari Panchayat Head Issue

அப்போதுதான் கார்த்திக் மாட்டிக் கொள்வான் என்பது அவரது திட்டம். ஏற்கனவே சொன்னபடி சாமுண்டீஸ்வரி புதையலை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோயிலுக்கு சென்றார். துறை அதிகாரிகளையும் கோயிலுக்கு வரச்சொன்னார். இதற்கிடையில் வெளியில் சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து கேமரா ரெக்கார்டை பரிசோதனை செய்து பார்த்தார். அதில், சந்திரகலா வந்து சென்ற வீடியோ காட்சிகள் அதில் இல்லை. அப்போதே கார்த்திக்கிற்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆனாலும், அதை அவர் காட்டிக்கொள்ளவில்லை. ரேவதி கேட்ட போதும் கூட ஒன்றும் சொல்லவில்லை.

45
Chandrakala Steals Treasure Box
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala Steals Treasure Box

இதைத் தொடர்ந்து புதையல் கிடைத்த கோயிலுக்கு சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் சென்றனர். அப்போது புதையலை திறக்க சொல்லி சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் புதையலை திறந்து பார்த்த போது அதில் வெறும் கல் தான் இருந்தது. இதைப் பார்த்து சாமுண்டீஸ்வரி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தனக்கு என்ன நடந்து என்றே தெரியாது என்று சாமுண்டீஸ்வரி கூறினார். ஆனால், ஊர் ஜனங்கள், அதனை நம்பவில்லை. ஏற்கனவே புதையலை பிரித்து கொள்ளலாம் என்று எல்லோரும் கூறும் போது இல்லை இல்லை இது சட்டப்படி தவறு. அதனால், நான், தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தான் ஒப்படைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

55
Karthigai Deepam Serial Today Episode Tamil
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode Tamil

அதுவரையில் என்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று கூறியிருந்தார். பத்திரமாக பூட்டியிருந்த புதையல் எப்படி காணாமல் போனது என்று தனக்கு தெரியாது என்று சாமுண்டீஸ்வரி புலம்பிய நிலையில் ஜனங்களில் ஒருவர் கோயில் நகையை அவரது அம்மா திருடினார். இப்போது அவரை மாதிரி அவரது மகளும் வந்துட்டாங்க என்று பேசினார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத சாமுண்டிஸ்வரி என்னுடைய அம்மா அப்படி செய்யவில்லை என்றார். 

பிறகு ஊர் பெரியவர்கள் சிலர், இன்னும் 2 நாட்களில் புதையல் நகை வரவில்லை என்றால் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜீனாமா செய்ய வேண்டும் என்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது எனக்கும், இந்த அம்மனுக்கும் தெரியும். அவளே புதையலை திருடியது யார் என்று நிரூபித்து காட்டுவாள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் 1136ஆவது எபிசோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!
Recommended image2
பகையை மறந்து பாசமழை பொழிந்த சரவணன்... மகிழ்ச்சி தாண்டவம் ஆடிய தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
அறிவுக்கரசிக்கு ஆப்பு வைத்த ஆதி குணசேகரன்... தர்ணாவில் இறங்கும் தர்ஷினி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved