- Home
- Cinema
- Karathey Babu Teaser : நான் அரசியலையே தொழிலா பண்றவேன்... கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் பாலிடிக்ஸ்..!
Karathey Babu Teaser : நான் அரசியலையே தொழிலா பண்றவேன்... கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் பாலிடிக்ஸ்..!
கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கராத்தே பாபு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

Karathey Babu Teaser
ரவி மோகன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'கராத்தே பாபு'. கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்குகிறார். சக்தி வாசுதேவன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் கணேஷ்பாபு இதற்கு முன்னர் கவின் நடித்த டாடா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்திருந்தார்.
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் ரவி மோகன்
கராத்தே பாபு திரைப்படம் நடிகர் ரவி மோகனுக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் இப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். ஏனெனில் அவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வருகின்றன. பிரதர், சைரன், காதலிக்க நேரமில்லை, இறைவன், அகிலன் என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அதே வேளையில், அவர் நடிப்பில் வெளிவந்த மல்டி ஸ்டாரர் படங்கள் வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன், அண்மையில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த பராசக்தி ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியை தேடித் தந்தன.
கராத்தே பாபு
இந்த நிலையில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் டைட்டில் வெளியீட்டின் போது வெளியான டீசரில், சட்ட சபையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ரவி மோகன் அமர்ந்திருப்பதை பார்த்த பலரும், அவர் பார்ப்பதற்கு பக்கா அரசியல்வாதி போல் தெரிவதாக பாராட்டி இருந்தனர். அந்த டைட்டில் டீசரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழுவினர் ரிலீஸ் செய்து உள்ளனர்.
கராத்தே பாபு டீசர் வெளியீடு
கராத்தே பாபு டீசரின் மூலம் இப்படத்தில் ரவி மோகன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதில் ஒன்று அரசியல்வாதியாகவும், மற்றொன்று கராத்தே மாஸ்டராகவும் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு எலெக்ஷனை ஒட்டி தான் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். படத்திலும் அனல்பறக்க அரசியல் வசனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஜெயலலிதாவை பற்றி சில சூசக டயலாக்குகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன் என்கிற பன்ச் டயலாக்குகளும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. இப்படம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
From the world of #Dada to a whole new rhythm. Very excited to share the first glimpse of my next journey. #KaratheyBabu Teaser out now! Need your love!@iam_RaviMohan@Screensceneoffl#SundarArumugam@SamCSmusic#Shakkthivasu#DaudeeJiwal@Ezhil_Dop@editorkathir@artdir_rajapic.twitter.com/Qtb6L0wD50
— ganesh.k.babu (@ganeshkbabu) January 24, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

