- Home
- Cinema
- யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
An Ordinary Man Movie Poojai and Shoot: நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'அன் ஆர்டினரி மேன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

அன் ஆர்டினரி மேன் பட பூஜை, An Ordinary Man Movie Pooja
An Ordinary Man Movie Poojai and Shoot: ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'அன் ஆர்டினரி மேன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ரவி மோகன், இப்போது இயக்குநராகவும் புதிதாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். தான் இயக்கும் முதல் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ், Ravi Mohan Studios production
இந்த நிலையில் தான் ரவி மோகன் இயக்குநராக அவதாரம் எடுக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். மேலும், கெனிஷா இந்தப் படத்தை தயாரிக்கிறார். மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வரும் ரவி மோகனுக்கு இப்போது அன்பாகவும், ஆறுதலாகவும் இருப்பது கெனிஷா தான்.
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு - லேட்டஸ்ட் அப்டேட்
தனது மனைவியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரவி மோகன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக வலம் வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தொடக்க விழாவில் ரவி மோகன் கெனிஷா பற்றியும், கெனிஷா ரவி மோகன் பற்றியும் இருவரும் மாறி மாறி பாராட்டி பேசினர்.
யோகி பாபு நடிக்கும் அன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடங்கியது
இப்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மாலையும் கழுத்துமாக நின்று குத்து விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்கியுள்ளனர். மேலும், யோகி பாபு உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர் ரவி மோகனின் முதல் இயக்கத்தில் யோகி பாபு,
முழுக்க முழுக்க மக்களுக்கான படமாகவும் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களையும் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் படத்திற்கு ஆன் ஆர்டினரி மேன் என்று டைட்டில் வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு ஹைட்ரோ இசையமைக்கிறார். விவன் ஆம்ப்ரோஸ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சிவா சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு அசாதாரணமான மன வலிமை மற்றும் மன உறுதியை கொண்டாடும் வகையில் ஆன் ஆர்டினரி மேன் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
An Ordinary Man movie cast and crew details Tamil,
அதோடு சமீபத்தில் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது தான் இந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. என்ன படம் என்பதை படம் வெளியான பிறகு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.