- Home
- Cinema
- மெய்யழகனும்... கராத்தே பாபுவும்! கார்த்தி உடன் சபரிமலைக்கு திடீர் விசிட் அடித்த ரவி மோகன்!
மெய்யழகனும்... கராத்தே பாபுவும்! கார்த்தி உடன் சபரிமலைக்கு திடீர் விசிட் அடித்த ரவி மோகன்!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி நடிகர்கள் ரவி மோகனும், கார்த்தியும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Ravi Mohan and Karthi Visit Sabarimala : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நடிகர்கள் ரவி மோகனும், கார்த்தியும் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு நடிகர் ஜெயராம் உடன் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு தன்னுடைய நண்பன் கார்த்தியை அழைத்து சென்றிருந்தார்.
நடிகர் கார்த்தி சபரிமலைக்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும். அவர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி கன்னிச் சாமியாக சபரிமலைக்கு சென்றார். கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றபோது கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் மலையாள நடிகர் திலீப்பை சந்தித்து பேசியுள்ளனர்.
Ravi mohan and Karthi Meet Dileep
பொன்னியின் செல்வனால் உருவான நட்பு
கார்த்தியும் ரவி மோகனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் ரவி மோகன், பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி, வந்தியத்தேவனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 800 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் நடித்தபோது தான் ரவி மோகனும், கார்த்தியும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
இதையும் படியுங்கள்... இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்; அவரின் முதல் பட ஹீரோ யார் தெரியுமா?
Karthi
கார்த்தி கைவசம் உள்ள படங்கள்
தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதுதவிர அவர் கைவசம் வா வாத்தியார் திரைப்படமும் உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2, இயக்குனர் சுந்தர் சி உடன் ஒரு படம், மாரி செல்வராஜ் உடன் ஒரு படம் என நடிகர் கார்த்தியின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது.
Ravi Mohan
ரவி மோகன் கைவசம் உள்ள படங்கள்
அதேபோல் நடிகர் ரவி மோகனும் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் தற்போது கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து பராசக்தி என்கிற படமும் அவர் கைவசம் உள்ளது. சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். இதுதவிர மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் ரவி.
இதையும் படியுங்கள்... சுந்தர் சி-யின் அடுத்த பட ஹீரோ இவரா? கோலிவுட்டில் உருவாகும் புது கூட்டணி!