இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்; அவரின் முதல் பட ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவி மோகன், விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் கசிந்துள்ளது.

Ravi Mohan Debut as Director Soon : கோலிவுட்டில் ஹீரோவாக இருந்து பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ராமராஜன், தனுஷ் ஆகியோர் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்துள்ளார் ரவி மோகன். அவர் தற்போது தமிழில் பிசியான ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று கராத்தே பாபு. இப்படத்தை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் ரவி மோகன்.
Ravi Mohan
கராத்தே பாபு படத்தை தொடர்ந்து ஜீனி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் ரவி மோகன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... மார்ச் 14ந் தேதி போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் படங்கள்
Ravi Mohan Upcoming Movies
இதுதவிர ரவி மோகன் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Yogi Babu
இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, இயக்குனராகும் படத்தின் பணிகளை தொடங்க உள்ளாராம் ரவி மோகன். இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முன்னர் நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போதில் இருந்தே ஒரு இயக்குனராகும் கனவோடு இருந்துள்ளார் ரவி மோகன். அந்த கனவு தற்போது நனவாக உள்ளது. அவர் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகர் யோகிபாபு தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... யோகி பாபு மருதமலை கோயிலில் சாமி தரிசனம்!நடிக்கும் படங்களின் கதைக் கோப்புகளை வைத்து பூஜை!