MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?

ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?

'சின்னர்ஸ்' படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ஆகபாவ், ஆஸ்கர் வரலாற்றில் இந்த விருதை வெல்லும் முதல் பெண் மற்றும் முதல் கறுப்பினப் பெண் என்ற இரட்டை சாதனையை அவர் படைத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Autumn Durald Arkapaw Record in Oscars
Image Credit : X

Autumn Durald Arkapaw Record in Oscars

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'சின்னர்ஸ்' என்ற சூப்பர்நேச்சுரல் ஹாரர்-த்ரில்லர் திரைப்படம் தொடர்ந்து விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை வென்ற இந்தப் படம், இப்போது மேலும் ஒரு பெரிய பெருமையை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆட்டம் டரால்டு ஆகபாவ் (Autumn Durald Arkapaw), சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்று, விருது விழாவில் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்கர் வரலாற்றில் இந்த பிரிவில் விருது வென்ற முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க கிரியோல் வம்சாவளியைச் சேர்ந்த ஆகபாவ், இந்த வத்தைப் பெறும் முதல் கறுப்பினப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24
ஆகபாவ் சாதனை
Image Credit : X

ஆகபாவ் சாதனை

2018-ல் 'Mudbound' படத்திற்காக ரேச்சல் மோரிசன், 2021-ல் 'The Power of the Dog' படத்திற்காக ஆரி வெக்னர், மற்றும் 2022-ல் 'Elvis' படத்திற்காக மாண்டி வாக்கர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். 'சின்னர்ஸ்' படத்தில் பணியாற்றியபோது ஆகபாவ் மற்றொரு சாதனையையும் படைத்தார். IMAX 65mm மற்றும் Ultra Panavision கேமராக்களைப் பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை படமாக்கிய முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

விருதை பெற்றுக்கொண்டபோது பேசிய ஆகபாவ், திரைப்படத்துறையில் உள்ள மற்ற பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக, ஒளிப்பதிவாளர் ரேச்சல் மோரிசனை அவர் குறிப்பிட்டுப் பேசினார். "இந்த விருது விழாவின் போது சக பெண்களிடமிருந்து நான் மிகுந்த அன்பை உணர்ந்தேன். பலரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. உங்களால் தான் இது போன்ற தருணங்கள் சாத்தியமாகின்றன. அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

Related Articles

Related image1
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Related image2
Oscar: ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனை.! ஒரே படத்திற்கு 16 ஆஸ்கர் பரிந்துரைகள் – சின்னர்ஸ் அதிசயம்!
34
ஆஸ்கர் விருது விழா
Image Credit : X

ஆஸ்கர் விருது விழா

ஆஸ்கர் விருதுக்கு முன்பு, பாஃப்டா (BAFTA) விருதுகள், பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் சினிமாட்டோகிராஃபர்ஸ் மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சினிமாட்டோகிராஃபர்ஸ் விருதுகளுக்கும் ஆகபாவ் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், ஆஸ்கர் இரவுக்கு முன்பு அந்த விருதுகள் எதையும் அவர் வெல்லவில்லை. ஆஸ்கர் விழாவில், 'Train Dreams' படத்திற்காக அடோல்ஃபோ வெலோசோ, 'One Battle After Another' படத்திற்காக மைக்கேல் பாமன், 'Frankenstein' படத்திற்காக டான் லாஸ்ட்ஸன், மற்றும் 'Marty Supreme' படத்திற்காக டேரியஸ் கோண்ட்ஜி ஆகியோருடன் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இயக்குநர் ரியான் கூக்லருடன் ஆகபாவ் பணியாற்றும் இரண்டாவது படம் 'சின்னர்ஸ்' ஆகும். இருவரும் இதற்கு முன்பு 'Black Panther: Wakanda Forever' படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

44
16 பிரிவுகளில் பரிந்துரை
Image Credit : X

16 பிரிவுகளில் பரிந்துரை

'சின்னர்ஸ்' திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், சிறந்த நடிகர் (மைக்கேல் பி. ஜோர்டான்), சிறந்த துணை நடிகை (வுன்மி மொசாகு), சிறந்த துணை நடிகர் (டெல்ராய் லிண்டோ), சிறந்த திரைக்கதை, காஸ்டிங், தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், ஒலி, விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த பின்னணி இசை மற்றும் "I Lied to You" என்ற சிறந்த பாடல் உட்பட மொத்தம் 16 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image2
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Recommended image3
காதல் தோல்வியால் உடைந்து நின்ற அர்ஜுன் தாஸ்? மிரட்டும் குரலுக்குப் பின்னால் இத்தனை சோகமா? வைரலாகும் உருக்கமான தகவல்!
Related Stories
Recommended image1
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image2
Oscar: ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனை.! ஒரே படத்திற்கு 16 ஆஸ்கர் பரிந்துரைகள் – சின்னர்ஸ் அதிசயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved