MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ

Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ

சினிமா உலகின் மிக உயரிய விருதான 98வது ஆஸ்கர் விருதுகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. இந்த விழாவில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் யார் என்பதைப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2026, 07:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Oscar Awards Winners List
Image Credit : Asianet News

Oscar Awards Winners List

சினிமா உலகின் மிக உயரிய விருதான 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடந்தது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, விழா நடக்கும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் பல படங்கள் முக்கியப் பிரிவுகளில் விருதுகளைக் குவித்துள்ளன. குறிப்பாக, 'ஃபிராங்கென்ஸ்டைன்', 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்', மற்றும் 'சின்னர்ஸ்' போன்ற படங்கள் பல பிரிவுகளில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

24
98வது ஆஸ்கர் விருது விழா
Image Credit : Asianet News

98வது ஆஸ்கர் விருது விழா

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் 'ஃபிராங்கென்ஸ்டைன்' படம் ஆஸ்கர் வென்றது. இந்த படத்திற்காக டமாரா டெவரெல் (தயாரிப்பு வடிவமைப்பு) மற்றும் ஷேன் வியோ (செட் வடிவமைப்பு) ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர். 'ஹாம்நெட்', 'மார்ட்டி சுப்ரீம்', 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்', 'சின்னர்ஸ்' ஆகிய படங்கள் இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

Related Articles

Related image1
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ஆஸ்கர் ரேஸில் எண்ட்ரி கொடுத்த காந்தாரா சாப்டர் 1..!
Related image2
Oscar: ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனை.! ஒரே படத்திற்கு 16 ஆஸ்கர் பரிந்துரைகள் – சின்னர்ஸ் அதிசயம்!
34
ஆஸ்கரில் அசத்திய அவதார்
Image Credit : X/@jamescameron

ஆஸ்கரில் அசத்திய அவதார்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படம் விருதை வென்றது. இந்த படத்திற்கு ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பெனெஹாம், எரிக் சைன்டன், மற்றும் டேனியல் பேரட் ஆகியோர் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே விருது 'சின்னர்ஸ்' படத்துக்காக ரியான் கூக்ளருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அடாப்டட் ஸ்கிரீன்பிளே விருது 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்துக்காக பால் தாமஸ் ஆண்டர்சனுக்கும் கிடைத்தது.

சிறந்த காஸ்டிங் பிரிவில் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸ் வென்றார்.

44
சிறந்த நடிகர், நடிகைகள் யார்?
Image Credit : X/ The Academy

சிறந்த நடிகர், நடிகைகள் யார்?

நடிகர், நடிகைகள் பிரிவிலும் சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகின. 'வெப்பன்ஸ்' படத்திற்காக ஏமி மாடிகன் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்திற்காக ஷான் பென் தட்டிச் சென்றார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'கே-பாப் டீமன் ஹன்டர்ஸ்' படம் வென்றது. இந்த படத்தை மேகி காங், கிறிஸ் ஆப்பிள்ஹான்ஸ், மற்றும் மிச்செல் எல்.எம். வாங் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருந்தனர்.

டெக்னிக்கல் பிரிவுகளிலும் பல படங்கள் விருதுகளை அள்ளின. 'ஃபிராங்கென்ஸ்டைன்' படம் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றது.

குறும்படப் பிரிவில், 'தி சிங்கர்ஸ்' மற்றும் 'டூ பீப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா' ஆகிய இரண்டு படங்களும் சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான விருதை பகிர்ந்து கொண்டன.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை 'தி கேர்ள் ஹூ க்ரைட் பெர்ல்ஸ்' படம் வென்றது. இப்படியாக, 98வது அகாடமி விருது விழா, சினிமா உலகில் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்வாக பதிவாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Recommended image2
காதல் தோல்வியால் உடைந்து நின்ற அர்ஜுன் தாஸ்? மிரட்டும் குரலுக்குப் பின்னால் இத்தனை சோகமா? வைரலாகும் உருக்கமான தகவல்!
Recommended image3
"தனிமையை உணர்ந்தேன்!" - நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்! சினிமா வாரிசாக இருந்தாலும் இத்தனை வலியா? வைரலாகும் பேட்டி!
Related Stories
Recommended image1
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ஆஸ்கர் ரேஸில் எண்ட்ரி கொடுத்த காந்தாரா சாப்டர் 1..!
Recommended image2
Oscar: ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனை.! ஒரே படத்திற்கு 16 ஆஸ்கர் பரிந்துரைகள் – சின்னர்ஸ் அதிசயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved