MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா! நிலைகுலைந்து போன சிவனாண்டி! கார்த்திகை தீபம் சீரியலில் உச்சக்கட்ட அதிர்ச்சி

தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா! நிலைகுலைந்து போன சிவனாண்டி! கார்த்திகை தீபம் சீரியலில் உச்சக்கட்ட அதிர்ச்சி

அக்காவின் கட்டாயம் மற்றும் கார்த்திக் ரேவதியை பழி தீர்க்க வேண்டும் என்ற உச்சகட்ட கோபத்தின் காரணமாக சந்திரகலா தனது கணவர் சிவனாண்டி கட்டிய தாலியை கூட கழற்றி கொடுக்க முன் வந்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Mar 17 2026, 06:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா
Image Credit : Zee Tamil You Tube

தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திக் ராஜ் லீடு ரோலில் நடித்து வரும் கார்த்திகை தீபம். இந்த சீரியலானது பிரிந்திருந்த 2 குடும்பங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோயில் புதையல் நகைகளை திருடி கடைசியில் கார்த்திக்கின் உண்மையான ஆதாரத்தின் மூலமாக சந்திரகலா பிடிபட்டார்.

26
Karthigai Deepam serial today episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam serial today episode

அவர் தான் உண்மையான திருடி என்ற தெரிந்து அதிர்ச்சியடைந்த சாமுண்டீஸ்வரி அவரை போலீசிலும் பிடித்துக் கொடுத்தார். பிறகு சிவனாண்டி ஜாமீனில் எடுக்க மீண்டும் அக்காவின் வீட்டிற்கு வந்து தனது நாடகத்தை அரங்கேற்றினார். அதில், உன் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறேன் என்று கூறி தீக்குளிக்கவும் முயற்சி செய்தார். அதோடு மட்டுமின்றி உனக்காகவும் தான் நான் இப்படியெல்லாம் செய்தேன். நம்முடைய அம்மாவை கொலை செய்த இந்த கொலைகார குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்கை பழி வாங்கவே நான் சிவனாண்டியுடன் கூட்டு சேர்ந்தேன் என்றார்.

36
Chandrakala gives back Thali to Shivanandi
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala gives back Thali to Shivanandi

இனிமேல் நான் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறி காலில் விழுந்து கதறி அழுதார். குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவை மன்னித்து வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டார். ஆனால், அதற்கு ஒரு கண்டிஷனும் போட்டார். இனிமேல் சிவனாண்டிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், அவன் கட்டிய தாலியை கழற்றி அவனிடம் கொடுத்துவிட வேண்டும் என்றார்.

தியேட்டரில் வராத 'தாய் கிழவி' பட காட்சிகள்! சென்டிமெண்டும், சுவாரஸ்யமும் நிறைந்த கண்ணீர் வரவழைக்கும் சீன்!

46
Chamundeswari and Revathi happy,
Image Credit : Zee Tamil You Tube

Chamundeswari and Revathi happy,

அதற்கு சந்திரகலா சம்மதிக்கவே, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், தனது தங்கச்சிக்கு இனிமேல் சிவனாண்டியுடன் வாழ விருப்பமில்லை. அதனால், காசு வெட்டி போட்டு அவர்களை பிரித்துவிடுங்கள் என்று சாமுண்டீஸ்வரி கூறவே, அதைக் கேட்ட ஊர் மக்கள் மட்டும் சிவனாண்டியும் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே தனது மகளுக்கு காசு வெட்டி போட்டு அவரது திருமணத்தை முறித்தார். இப்போது அவருடைய தங்கை திருமணத்தையும் முறிக்கிறார் என்றெல்லாம் பேசினார்கள்.

கல்யாணம் பண்ணிக்கிறியா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தொடரில் அதிர வைக்கும் காதல் ப்ரொபோசல்!

56
Karthigai Deepam latest promo Tamil
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam latest promo Tamil

சிவனாண்டி தனது மனைவிக்கு இதில் விருப்பமில்லை. இவர் தான் நாடகமாடுகிறார் என்று சாமுண்டீஸ்வரியை பேச, அதன் பிறகு இல்லை, எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். முத்துவேலுவும் தன் பங்கிற்கு வக்காலத்து வாங்க சாமுண்டீஸ்வரி முன்பு எதுவும் எடுபடவில்லை. கடைசியில் சந்திரகலா தனது தாலியை கழற்றி சிவனாண்டி கையில் கொடுத்துவிட்டார். பிறகு காசு வெட்டி போட்டு சிவனாண்டி மற்றும் சந்திரகலாவின் திருமண பந்தத்தை முறித்துவிட்டனர்.

66
Chandrakala Next Plan
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala Next Plan

அப்போது ரேவதி தனக்கு நடந்தவற்றை நினைத்து பார்த்தார். தனது சித்தி சந்திரகலா, தனக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான திருமண பந்தம் முறிய காரணமாக இருந்தார். இப்போது அவருடைய திருமண வாழ்க்கையே முறிந்துவிட்டது என்று எண்ணி சந்தோஷம் கொண்டார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த நிலையில், கார்த்திக் பற்றி பேச சாமுண்டீஸ்வரி அவரை தனது மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அதன் பின்னர், கார்த்திக் ஒரு சபதம் எடுக்கிறார். அதாவது, தாத்தா குடும்பத்திற்கும் உங்களது அம்மாவின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்து காட்டி கும்பாபிஷேகத்தை தனது மாமா ராஜராஜனை வைத்து நடத்தி காட்டுவேன் என்று சபதம் எடுக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
Recommended image3
உச்சத்தில் கார்த்திக்... உருக்கும் தனிப்பட்ட சோகம்! இந்த வெற்றிக்கு பின்னால் இவ்வளவு வலியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved