ஒரு போட்டோவுக்காக என்ன பாடு படுத்துறாங்க...சிக்கி தவிக்கும் பொன்னியின் செல்வன் டீம்
தங்களது சரியான பொசிஷனில் நிற்க தடுமாறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதோட தனது டீமை வெயிலிலிருந்து செக்யூர் பண்ணும் ஜெயம் ரவியின் க்யூட் காட்சிகளும் அதில் இடம் பிடித்துள்ளது.
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சோழ வம்ச வாரிசுகளாக நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த், சங்கர் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களது மேடைப்பேச்சுகளும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டது.
தற்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக பல மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது பொன்னியின் செல்வன் டீம். அந்த வகையில் தற்போது மும்பை சென்றுள்ள பொன்னியின் செல்வன் நாயகர் நாயகிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பள்ளி குழந்தைகளுடன் விஜயின் பீஸ்ட் ஸ்டெப்பை போட்ட நடிகை கத்ரீனா கைஃப்
முன்னதாக செம மாஸாக என்ட்ரி கொடுத்திருந்த ஏ ஆர் ரகுமான், விக்ரம் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது பத்திரிகையாளர்கள் ஜெயம் ரவி, சோபிதா துளிபாலா, கார்த்தி, திரிஷா உள்ளிட்டோரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்கின்றனர். அப்போது அவர்கள் தங்களது சரியான பொசிஷனில் நிற்க தடுமாறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதோட தனது டீமை வெயிலிலிருந்து செக்யூர் பண்ணும் ஜெயம் ரவியின் க்யூட் காட்சிகளும் அதில் இடம் பிடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...வைரலாகும் ஜெசிக்கா சேலஞ்ச்..மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் செகண்ட் சிங்கிள்