பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் பிரபல பள்ளி ஒன்றில் குழந்தைகளுடன் அரபிக் குத்து பாடலுக்கு  ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ராணுவ வீரராக விஜய் நடித்திருந்த இந்த படத்தில் தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார். தீவிரவாதிகளால் ஹைஜெக் செய்யப்பட்டுள்ள பிரபல மாலில் சிக்கியுள்ள மக்களை எவ்வாறு நாயகன் காப்பற்றுகிறார் என்பதே இதன் கதையாக இருந்தது. 

படம் வெளியாகும் முன்னரே படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியாகி இருந்தது. ஜோனிடா காந்தி- அனிரூத் குரலில் வெளியான இந்த பாடல் அதிக ரீல்ஸ்கள் செய்யப்பட்டன. அதோடு விஜயின் ஸ்டேப் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து இருந்தது. இந்த பாடலுக்கு விளையாட்டு வீரர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடன அசைவுகளை இட்டு அசத்தியிருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை கண்டது. தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கம் இந்த படத்தின் முதல் பாடலையும் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் படமாக்க விஜய் கூறியதை அடுத்து அங்கேயே முதல் சிங்கிள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் செய்திகளுக்கு...வைரலாகும் ஜெசிக்கா சேலஞ்ச்..மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் செகண்ட் சிங்கிள்

Scroll to load tweet…

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் பிரபல பள்ளி ஒன்றில் குழந்தைகளுடன் அரபிக் குத்து பாடலுக்கு ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான இவர் தற்போது மேரி கிருஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...நாம் நினைப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதில்லை...புலம்பித்தள்ளிய பிரபல நடிகையின் மகள்