சுருளி அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. படையெடுத்த சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்..
விடுமுறை தினத்தை முன்னிட்டு சின்ன சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள சின்ன சுருளி அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் காரணமாக நீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவியில் ஆனந்தமாக குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
மேலும் படிக்க:நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்து யோகா ஆசிரியர்..
தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தங்கள் குடும்பங்களுடன் ஏராளமானோர் வருகை புரிந்தனர்.