நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்த யோகா ஆசிரியர்..
நீரில் மிதந்தவாறு பல்வேறு யோகசனங்களை செய்து காஞ்சிபுரத்தை சேர்ந்த யோக ஆசிரியர் தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சஹானா எனும் யோகா மையத்தை நிறுவி, அதன் மூலம் பலருக்கும் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் காலை 7 மணி முதல் 3 மணி நேரம் 4 நிமிடங்கள் 25 நொடிகள் நீரில் மிதந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்து தனியார் அமைப்பு சார்பில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க:போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..
முந்தைய சாதனை 1மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் அதனை இவர் முறியடித்துள்ளார். பத்மாசனம் உள்ளிட்ட 15 ஆசனங்களை நீரில் மிதந்தப்படி மிதந்தபடி செய்து காட்டினர். இந்த நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தொடக்கி வைத்தார்.