MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஃபேஸ்புக்கில் ட்விஸ்ட் வைத்த தோனி.. என்ன சொல்லப்போகிறார் தல..? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

ஃபேஸ்புக்கில் ட்விஸ்ட் வைத்த தோனி.. என்ன சொல்லப்போகிறார் தல..? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

செப்டம்பர் 25ம் தேதி மதியம் 2 மணிக்கு நேரலையில் மக்களை சந்தித்து பேசவுள்ளதாக தோனி ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 24 2022, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்.  டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஓய்வு பெற்றார். 

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

35

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக 4 முறை கோப்பையை வென்று கொடுத்து ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணி திகழ முக்கிய காரணமாக திகழும் தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை மண்ணில் ரசிகர்கள் மத்தியில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

45

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் ஹோம் & அவே என்ற பழைய ஃபார்மட்டில் ஆடவுள்ளது. எனவே அடுத்த சீசன் போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதால், அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனில் தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். எனவே அடுத்த ஐபிஎல் சீசன் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க - அந்த விஷயத்துல மத்தவன்லாம் வெத்து.. நான் தான்டா கெத்து..! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை

55

இந்திய அணி தோனி தலைமையில் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், செப்டம்பர் 25(நாளை) மதியம் 2 மணிக்கு உங்களுக்கு பரபரப்பான செய்தியை சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து தோனி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

About the Author

KV
karthikeyan V
ஐபிஎல்
எம். எஸ். தோனி
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Recommended image2
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”
Recommended image3
Vaibhav Suryavanshi: ஒவ்வொரு அடியும் இடி மாதிரி.. சிக்சர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved