மகாளய அமாவாசை.. புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்..
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். புரட்டாசி மாதத்தில் வரும் பெளணர்மிக்கு மறுநாள், பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கும். மேலும் ஆடி மற்றும் தை அமாவாசையை விட, மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு சிறந்தது என்று கூறப்படும்.
மேலும் படிக்க:மஹாளய அமாவாசை.. வைகையாற்றில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..
எனவே மாகாளய அமாவசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கபடும். கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று, புனித நீராடி, அரசி, காய் உள்ளிடவற்றை படையலிட்டு முன்னோர்களை வழிபடுவது ஐதீகம்.
அதன் படி இன்று மகாளய அமாவாசையையொட்டி பல்வேய் பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களை வேண்டி திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.
இதே போல் வேதபுரீஸ்வரர் கோயில் குளக்கரை, மரபினர் பூந்தோட்டம், சங்கராபரணி ஆற்றங்கரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.