அதிர்ச்சி !! பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்.. இது தான் காரணமா.?
உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டதில், அவர் கவலைகிடமாக உள்ளார்.
உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் ராம் ஸ்வரூப் இன்டர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இன்று வழக்கம் போல் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, 12 ஆம் வகுப்பறையில் நூழைந்த போது, மாணவன் குர்விந்தர் சிங், தான் ஒளித்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.
முதலில் வானத்தை நோக்கி சுட்ட மாணவன், அடுத்து எதிரில் நின்றுக்கொண்டிருந்த முதல்வரை நோக்கி சுட்டுள்ளான். மீண்டும் மூன்றாவது முறையாக சுட முயன்ற அவனை, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தடுத்து மடக்கி பிடித்துள்ளனர். இதில் வயிற்று பகுதியில் பலத்த காயமடைந்த பள்ளி முதல்வர்,உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க:பில்கிஸ் பானு குடும்பத்தினரை சந்திப்பீர்களா..? ஆர்ஆர்எஸ் தலைவர் பகவத் மசூதி விசிட்.. காங்கிரஸ் பதிலடி..
தற்போது மேல் சிகிச்சைக்காக, லக்னெளவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் துப்பாக்கியால் சுட்டதில் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில் இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:இந்தியா கேட்டை அலங்கரிக்கும் ''நேதாஜி சிலை''யை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் உடன் சிறப்பு நேர்காணல்!
இது தொடர்பாக பள்ளி முதல்வர், குர்விந்தர் சிங் தான் சண்டைக்கு காரணம் என்று கூறி அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் இனி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனால் மாணவன் குர்விந்தர் சிங் பள்ளி முதல்வர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக சொல்லபடுகிறது. இந்நிலையில் இன்று காலை, பள்ளியில் முதல்வரை கண்ட மாணவன் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளான். பின்னர் அங்கிருந்த தப்பித்து ஓடிய மாணவன், தற்போது தலைமறைவாக உள்ளார்.
மாணவன் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை பிடிக்க இரண்டு தனிபடைகள் அமைக்கபட்டுள்ளன. ஏ.315 எனும் துப்பாக்கியை மாணவன் பயன்படுத்தியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீதாபூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.