MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு

சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 10 2026, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிலிண்டர் தட்டுப்பாடு
Image Credit : X

சிலிண்டர் தட்டுப்பாடு

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரானது உலகின் பல்வேறு மூளை முடுக்குளிலும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஈரானின் எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரிங்களில் சமையல் எரியாவுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.

24
உணவகங்கள் மூடல்
Image Credit : X

உணவகங்கள் மூடல்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பல்வேறு நகரங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவகங்கள் விறகு அடுப்பு மற்றும் மாற்று வழியைப் பின்பற்றத் தொடங்கி உள்ளன. ஆனால் பெரும்பாலான உணவகங்கள் கேஸ் சிலிண்டரை மட்டுமே நம்பி இருப்பதால் சென்னை, மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான உணவகங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்களுக்கு மாற்றாக உணவக உரிமையாளர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை கள்ள சந்தையில் வாங்க முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் கள்ள சந்தையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1500 வரை விற்கப்படுவதால் இதுவும் உணவக உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Related Articles

Related image1
இஸ்ரேல் - ஈரான் போர்.. ஆனால் குறிவைக்கப்படுவது இந்தியாவா? ஹேக்கர்களால் ஐடி நிறுவனங்களுக்கு வந்த புது சிக்கல்!
Related image2
Cylinder Price: இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய LPG நிறுவனங்கள்.. சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு
34
பதிவு செய்வதில் கட்டுப்பாடு
Image Credit : X

பதிவு செய்வதில் கட்டுப்பாடு

வீட்டு உபயோக சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக வீட்டு உபயோக சிலிண்டர் கால அவகாசம் 21 நாட்களாக இருந்த நிலையில் தற்போது அது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சிலிண்டரை கொள்முதல் செய்தால் அடுத்த 25 நாட்கள் கழித்தே அடுத்த சிலிண்டரை பதிவு செய்ய முடியும்.

44
எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
Image Credit : X

எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

இதனிடையே LPG உற்பத்தியை அதிகப்படுத்துமாறு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கையிறுப்பில் உள்ள சிலிண்டர்களின் விவரங்களை இன்றே வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தேவைக்கு அதிகமான அளவிலேயே சிலிண்டர்கள் கையிருப்பில் இருப்பதாக ஹிந்துஸ்தான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவக்கூடிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
ஈரான்
இசுரேல்
சமையல் எரிவாயு
எண்ணெய்
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி
Recommended image2
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!
Recommended image3
நீடிக்கும் போர் பதற்றம்.! இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? மத்திய அரசு கூறுவது என்ன?
Related Stories
Recommended image1
இஸ்ரேல் - ஈரான் போர்.. ஆனால் குறிவைக்கப்படுவது இந்தியாவா? ஹேக்கர்களால் ஐடி நிறுவனங்களுக்கு வந்த புது சிக்கல்!
Recommended image2
Cylinder Price: இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய LPG நிறுவனங்கள்.. சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved