Ponniyin selvan : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹாலிவுட் பகுதியில் பொன்னியின் செல்வன் படத்தின் பேனருடன் விமானம் ஒன்று வட்டமிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளும் படு பிசியாக நடைபெற்று வருகின்றன. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள், அப்படத்தை முழுவீச்சில் புரமோட் செய்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், உலகளவிலும் பிரம்மாண்டமாக புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள பிரம்மாண்ட திரையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அங்கு திரையிடப்பட்ட முதல் தமிழ் பட டிரைலர் இதுவாகும்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... 6 முறை பூகம்பம் வந்தும் அசராம நிக்குதுனா சும்மாவா... தஞ்சை பெரிய கோவிலின் பெருமைகளை பேசி மார்தட்டிய விக்ரம்

அதேபோல் இன்று ஹாலிவுட்டில் பொன்னியின் செல்வன் படத்தை புரமோட் செய்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹாலிவுட் பகுதியில் பொன்னியின் செல்வன் படத்தின் பேனருடன் விமானம் ஒன்று வட்டமிட்டுள்ளது. படத்தை உலகளவில் புரமோட் செய்யும் வகையில் படக்குழு இவ்வாறு செய்துள்ளது.

Scroll to load tweet…

பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அங்கு மட்டும் முன்பதிவு மூலம் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக திரையுலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் பெற்ற பிரபலங்கள்... அதிக சம்பளம் யாருக்கு?- முழு விவரம் இதோ