- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் பாண்டி திருமணத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டிருந்த நிலையில், அனைவரின் பார்வையும் தற்போது சேரன் பக்கம் திரும்பி உள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியன் திருமணம் குறித்து பேச சரியான நேரத்திற்கு வராததால், செம கோபத்தில் இருக்கும் சேரன், அவர் வீட்டுக்கு வந்தது அவரை திட்டுகிறார். பொண்ணு பார்க்க வர்றோம்னு சொல்லிட்டு போகலேனா வானதி வீட்டுல என்ன நினைப்பாங்க, என கேட்கையில், நான் வானதி வீட்டுக்கு போயிட்டு வந்துட்டேன் என கூறுகிறார் பாண்டி. என்ன சொன்ன என கேட்கும் போது, தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும், தன்னுடைய அண்ணன் சேரனுக்கு கல்யாணம் ஆன பின்னரே என்னுடைய திருமணம் நடக்கும் என கூறிவிட்டதாக பாண்டி சொல்கிறார்.
சேரனின் கல்யாணப் பேச்சை எடுக்கும் நிலா
பொண்ணு பார்க்க வர்றோம்னு சொல்லிட்டு, இப்போ போய் சொன்னா, வானதி வீட்டுல நம்மல பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா என சேரன் கேட்கிறார். நியாயப்படி பார்த்தால் பாண்டியின் முடிவும் சரிதான் என சொல்லும் நிலா, முதலில் உங்க கல்யாணத்தை முடிப்போம் என பேச்சை எடுக்கிறார். சோழனிடம் நம்ம நேரா சந்தா வீட்டுக்கு போறோம், பொண்ணு கேக்குறோம், அண்ணேன் உனக்கு கல்யாணம் பண்ணி உன்னையும் சந்தாவையும் குதிர மேல உட்கார வச்சு, ஊர்வலமா அழைச்சிட்டு போறோம் என சொல்கிறார்கள். ஆனால் சேரன், எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என கூறுகிறார்.
கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சந்தாவின் அண்ணன்
ஏன் என்னாச்சு என நிலா கேட்க, சந்தா வீட்டில் நிறைய பிரச்சனை இருக்கு, அதெல்லாம் முடிஞ்ச பின்னர் கல்யாணம் பண்ணிக்கிறேன் என சாக்குபோக்கு சொல்கிறார். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், ஏற்கனவே கல்யாணம் ஆன நிலாவும், சோழனும் இன்னும் சேர்ந்து வாழாம இருக்காங்க, அவங்க சேர்ந்து வாழும் வரை நம்முடைய கல்யாணத்தை தள்ளிப்போடலாம் என சேரன் முடிவெடுத்திருக்கிறார். இதன் பின்னர் நிலா சோழனுடன் சென்று சந்தா வீட்டில் சேரனின் திருமணம் பற்றி பேசுகிறார். அப்போது தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என கூறுகிறார் சந்தாவின் அண்ணன்.
பாண்டியை வெறுக்கும் வானதி
மறுபுறம் பாண்டி திருமண பேச்சுவார்த்தையை நிறுத்தியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நிலா. அவரை சமாதானப்படுத்த அவருக்கு பலமுறை போன் போட்டுப் பார்க்கிறார் பாண்டி. ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை. தன்னுடைய நம்பரில் இருந்து அழைத்தால் வானதி போனை எடுக்காததால், வேறு நம்பரில் இருந்து முயற்சித்துப் பார்க்கிறார் வானதி. அந்த நம்பரில் இருந்து அழைத்ததும் போனை எடுக்கிறார் வானதி. அப்போது பாண்டியின் குரலைக் கேட்டதும் போனை கட் பண்ணிவிடுகிறார் வானதி. இதனால் கடும் கோபம் அடைகிறார் பாண்டி.
காதலி உடன் டேட்டிங் பண்ணும் பல்லவன்
பாண்டியும், சேரன் திருமணம் வேண்டாம் என அடம்பிடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பல்லவன் தன்னுடைய காதலி உடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். இருவரும் ஒன்றாக கஃபே ஒன்றிற்கு சென்று சாப்பிடுகிறார்கள். போகிற போக்கை பார்த்தால், தன்னுடைய அண்ணன்களுக்கு முன்பே பல்லவன் திருமணம் செய்துகொள்வார் போல தெரிகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

