- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் பாண்டியிடம் தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு கூறும் வானதி, உடனே கல்யாணம் பண்ண வற்புறுத்துகிறார். இதனால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா இருவரும் தங்கள் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது சோழனை போட்டோ எடுக்க அழைத்து சென்ற நிலா, மேக்கப் இல்லாமல் டல் ஆக தெரிந்ததால், சோழனிடம் போனை கொடுத்துவிட்டு உள்ளே மேக்கப் போட சென்றிருந்தார். அந்த கேப்பில் நிலாவுக்கு ராகவ்விடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதைக்கேட்டு கருப்பான சோழன், அவரை திட்டி ரிப்ளை பண்ணுகிறார். இதைப்பார்த்த ராகவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கல்யாணத்துக்கு தயக்கம் காட்டும் பாண்டியன்
சோழனும் நிலாவும் ஒருபக்கம் ஜாலியாக போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் வானதி பாண்டியனை தனியாக அழைத்து செல்கிறார். இப்பவே என்னோட அம்மாவும், அப்பாவும் உங்களை பொண்ணு கேட்டு வரச் சொன்னாங்க, அவங்க நல்ல மூடில் இருக்கும் போதே வந்து பேசி முடிச்சிடுங்க, இல்லேனா, அவங்களோட மனசு மாறுனாலும் மாறிடும் என சொல்கிறார். அதற்கு பாண்டியன், இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் என தயங்கிக் கொண்டே நிற்கையில் என்ன பிரச்சனை என வானதி கேட்க, எங்க வீட்டுல இருக்குறது ரெண்டு ரூம் தான், நம்ம கல்யாணம் பண்ணிகிட்டா எங்க போய் தங்குறது அதான் யோசிக்குறேன் என கூறுகிறார் பாண்டியன்.
நிலாவை வீட்டை விட்டு வெளியேற்ற பிளான் போடும் வானதி
இதற்கு பதிலளிக்கும் வானதி, எதுக்காக உங்க அண்ணிக்கு தனியா அவ்வளவு பெரிய ரூம் கொடுத்திருக்கீங்க. அவங்க செஞ்சதே ஒரு டூப்ளிகேட் கல்யாணம் தான, அவங்களை அந்த ரூமை விட்டு வெளியேறி ஹாஸ்டல்ல இருக்க சொல்லு, நம்ம அந்த ரூமை எடுத்துக்கலாம் என வானதி சொல்ல, உடனே கடுப்பான பாண்டியன் வானதியை திட்டுகிறார். உடனே வானதி, சரி கல்யாணம் பண்ணி நம்ம தனிக்குடித்தனம் போயிடுவோம் என சொல்ல, அதற்கும் பாண்டியன் தயாராக இல்லை. இப்படி இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்க, அப்போது பாண்டியனை பல்லவன் உள்ளே அழைத்து செல்கிறார்.
பாண்டியனை எச்சரிக்கும் நடேசன்
வானதி தன் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அனைவரிடமும் சொன்னதால், அதுபற்றி பேச பாண்டியனை உள்ளே அழைந்திருந்தார் சேரன். அப்போது அனைவரும் அமர்ந்து பேசி, சூட்டோடு சூடாக போய் பொண்ணு கேட்கலாம் என அனைவரும் முடிவு செய்கிறார்கள். இதையடுத்து வானதி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் நடேசன் வந்து மகன்களிடம் பேசுகிறார். அப்போது அந்த பெண்ணெல்லாம் உனக்கு செட்டே ஆகாது, அவளை உன்னால் சமாளிக்க முடியாது என கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாகவே இருக்கிறார் பாண்டியன்.
நிலாவுக்கு தெரியவரும் உண்மை
மறுபுறம் நிலா ஆபிஸில் இருக்கும்போது, ராகவ் அவரை தனியாக அழைத்து சென்று, நான் உங்களுக்கு பொங்கல் வாழ்த்து தான சொன்னேன், அதுக்காக நீங்க என்னை இப்படியெல்லாமா திட்டுவீங்க என ராகவ் கேட்க, என்னது பொங்கல் வாழ்த்தா, நான் எதையுமே பார்க்கலயே என கூறுகிறார் நிலா. அப்போது ராகவ் தன்னுடைய மொபைலை எடுத்து காட்டுகிறார். அதன் பின்னர் தான் நிலாவுக்கு தெரிகிறது சோழன் தான் இந்த வேலையை பார்த்திருப்பார் என்று. இதைச் சொல்லி ராகவ் நிலாவிடம் ஃபீல் பண்ணுகிறார். இதன்பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

