MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • காத்திருக்கும் வானதி வீட்டார்... காணாமல் போன பாண்டியன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்

காத்திருக்கும் வானதி வீட்டார்... காணாமல் போன பாண்டியன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்

அய்யனார் துணை சீரியலில் தன்னை பெண் கேட்க வருமாறு பாண்டியிடம் கூறிச் சென்ற வானதி அவருக்காக காத்திருந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Unexpected Twist in Ayyanar Thunai serial
Image Credit : youtube/vijaytelevision

Unexpected Twist in Ayyanar Thunai serial

விஜய் டிவியில் சக்கை போடு போட்டு வரும் சீரியல்களில் அய்யனார் துணை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அய்யனார் துணை சீரியலில் கடந்த வாரம் முழுக்க உயிலைத் தேடி வீட்டை மீட்கும் வேலையில் சோழன் நிலா ஆகியோர் பிஸியாக இருந்தனர். ஒரு வழியாக வீட்டின் உயிலை கண்டுபிடித்து மீண்டும் கெத்தாக வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் அய்யனார் துணை பேமிலி. வீட்டுக்கு வந்த கையோடு பொங்கல் பண்டிகையையும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை. இந்த கொண்டாட்டத்தின் போதே ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

25
பிரச்சனையை கிளப்பும் வானதி
Image Credit : youtube/vijaytelevision

பிரச்சனையை கிளப்பும் வானதி

தன் காதலன் பாண்டியுடன் பொங்கல் கொண்டாட காலையிலேயே கிளம்பி வந்த வானதி, தன் வீட்டில் நம் இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக ஒத்துக் கொண்டதாகவும் அதற்காக உங்கள் அண்ணனிடம் பேசி பெண் கேட்க வருமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கும் பாண்டியன், தற்போது வீட்டில் போதுமான இடம் இல்லாததால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என சொல்கிறார். அதற்கு வானதி, உங்க அண்ணி நிலா போலியான ஒரு திருமணத்தை தானே செய்திருக்கிறார். நமக்கு கல்யாணம் ஆனதும் அவரை ரூமை விட்டு வெளியே அனுப்பிவிட்டு நாம் இருவரும் அந்த தனி அறையை எடுத்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

Related Articles

Related image1
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
வானதியால் வரும் பிரச்சனை... பொங்கல் கொண்டாட்டத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
35
பெண் கேட்க வரச்சொன்ன வானதி
Image Credit : youtube/vijaytelevision

பெண் கேட்க வரச்சொன்ன வானதி

இதைக் கேட்ட பாண்டியன் இதனால் குடும்பத்தில் பிளவு ஏற்படும் என பயப்படுகிறார். பின்னர் சேரனிடம் பேசும் வானதி தன் வீட்டில் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் அதனால் நீங்கள் முறைப்படி பொண்ணு கேட்க வருமாறு கூறியிருக்கிறார். மறுநாள் மாலையில் வானதி வீட்டுக்கு வருவதாக சொல்லி இருக்கிறார் சேரன். இதனால் வானதி வீட்டிலும் அவருடைய அப்பா அம்மா ஆகியோர் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள் என ஆவலோடு காத்திருக்கிறார்கள். வானதியும் டிப்டாப்பாக கிளம்பி பாண்டிக்காக காத்திருக்கிறார். 5:30 முதல் 6 மணி வரை தான் நல்ல நேரம் இருப்பதாகவும் அதற்குள் மாப்பிள்ளை விட்டார் வரவேண்டும் என்றும் வானதியின் தாய் மாமா கூறுகிறார்.

45
காத்திருக்கும் வானதி
Image Credit : youtube/vijaytelevision

காத்திருக்கும் வானதி

அதற்கு வானதி அதெல்லாம் அவங்க டைமுக்கு வந்துருவாங்க என நம்பிக்கையுடன் கூறுகிறார். பின்னர் கொஞ்ச நேரம் ஆன பிறகு வானதியின் அண்ணன் அதெல்லாம் அவர்கள் வரமாட்டார்கள், அப்படியே இவளை கழட்டி விடலாம் என நினைத்திருப்பார்கள் என என சொல்கிறார். இதைக் கேட்டுக் கடுப்பான வானதி, பாண்டி அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அவங்க கண்டிப்பா வருவாங்க, நான் பாண்டி அண்ணனுக்கு போன் பண்ணி கேட்கிறேன் என சொல்கிறார். இதை எடுத்து சேரனுக்கு போன் போட்டு பேசுகிறார் வானதி. அவர் தாங்கள் வீட்டில் தான் இருக்கிறோம் என்கிற விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு ஷாக் ஆனா வானதி இன்னும் நீங்க கிளம்பவே இல்லையா... எப்ப கிளம்புவீங்க என கேட்கிறார்.

55
பயத்தில் பாண்டி
Image Credit : youtube/vijaytelevision

பயத்தில் பாண்டி

அதற்கு சேரன், பாண்டி வந்தவுடன் கிளம்பி வருவோம் எனக் கூறுகிறார். ஆனால் பாண்டி வானதி வீட்டுக்கு செல்லாமல் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். வானதிக்கும் தனக்கும் தற்போது கல்யாணம் ஆனால் நிலாவை ரூமை விட்டு வெளியே அனுப்ப வேண்டிய சூழல் வரும். இதனால் குடும்பத்திற்குள் வீண் பிரச்சனை உருவாகும் என பயந்து பாண்டியன் வானதி வீட்டுக்கு செல்லாமல் இருக்கிறார். இதை எடுத்து என்ன ஆனது? வானதியைப் பெண் கேட்க பாண்டியும் அவரது அண்ணன்களும் சென்றார்களா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image3
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Related Stories
Recommended image1
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
வானதியால் வரும் பிரச்சனை... பொங்கல் கொண்டாட்டத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved