MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் பாண்டியனும் வானதியும் மெக்கானிக் ஷாப்பில் உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணுவதை அவருடைய தாய்மாமா பார்த்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நடேசனின் வீட்டை அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்து சீல் வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உயில் நடேசன் பெயரில் இருப்பதை அறிந்த நிலா, சோழனின் உதவியோடு, வீட்டுக்குள் ஏறி குதித்து அந்த உயிலை எடுத்ததோடு, போலீசிடம் கொடுத்து வீட்டையும் மீட்டிருக்கிறார். வீட்டை மீட்ட கையோடு, வேலைகளையும் தொடங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த தன்னுடைய அண்ணனை வாண்டடாக வம்பிழுத்து, அவர் முன்னிலையில் ஆட்டம் போட்டுள்ளார் நடேசன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குஷியில் நடேசன் போடும் ஆட்டம்
Image Credit : jiohotstar

குஷியில் நடேசன் போடும் ஆட்டம்

நடேசன் உடன் சேர்ந்து அவருடைய மகன்களான சோழன், பாண்டியன், பல்லவன் ஆகியோரும் அவர்களுடைய பெரியப்பாவை வச்சி செய்கிறார்கள். அவரை இழுத்து டான்ஸ் ஆடி கலாய்த்து அனுப்புகிறார்கள். இதன்பின்னர் அனைவரும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாராகிறார்கள். பொங்கல் கொண்டாட என்ன செய்யப்போகிறீர்கள் என நிலா கேட்கையில், கடையில போய் பொங்கல் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிடுவோம்னு நடேசன் கூறுகிறார். இந்த வருஷம் அப்படியெல்லாம் பண்ண முடியாது, நம்ம வீட்டிலேயே கிராண்ட் ஆக செலிபிரேட் பண்ணுவோம் என கூறி இருக்கிறார் நிலா.

35
பொங்கல் கொண்டாட்டம்
Image Credit : jiohotstar

பொங்கல் கொண்டாட்டம்

சரி பொங்கலை எப்படி செலிபிரேட் பண்ணனும் என அனைவரும் கேட்க, நிலா, என்னவெல்லாம் வாங்க வேண்டும் என லிஸ்ட் போடுகிறார். உடனே சோழன், இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து, நிலாவிடம் நீயும் நானும் போய் பொங்கலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வந்திடுவோம் என கூறுகிறார். நிலாவுக்கு சோழனை பிடித்துவிட்டதால் அவரும் ஓகே சொல்லிவிடுகிறார். இதையடுத்து இருவரும் காரை எடுத்துக் கொண்டு பொங்கல் பொருட்களை வாங்க செல்கிறார்கள்.

45
தாய்மாமாவிடம் சிக்கும் வானதி
Image Credit : jiohotstar

தாய்மாமாவிடம் சிக்கும் வானதி

மறுபுறம் பாண்டியன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அப்போது வானதி அங்கு வருகிறார். வழக்கம்போல், வானதி வந்தாலே ஏழரை தான் என்று சொல்வது போல், ஏதேதோ பேசி பாண்டியனை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். பொங்கலுக்கு எனக்கு ஏதாச்சும் கிஃப்ட் வாங்கிக் கொடு என வானதி கேட்க, அதற்கு பாண்டியன், என்ன வாங்கிக் கொடுக்கணும்னு கேட்க, கிஃப்டெல்லாம் நீயா தான் வாங்கித் தரணும்னு சொல்ல, அதற்கு அவரோ, நான் வேண்டுமென்றால் கரும்பு, பொங்கப் பானை வாங்கித் தரட்டுமா என பாண்டியன் நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வானதியின் தாய்மாமா அந்த வழியாக செல்கிறார்.

55
வானதியின் கல்யாண பேச்சை எடுத்த தாய்மாமா
Image Credit : jiohotstar

வானதியின் கல்யாண பேச்சை எடுத்த தாய்மாமா

அவர் வானதியும், பாண்டியனும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நேராக வீட்டுக்கு சென்றதும் வானதியை பற்றி தான் பேசுகிறார். அந்த பையன் நல்ல பையன்னு நீங்களே சொல்றீங்க, அப்புறம் என்ன அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணிவச்சிர வேண்டியதுதான என பேசிக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் மறுபுறம் கரும்பு, பொங்கல் பானை என எல்லாவற்றையும் வாங்கிவிட்டு சோழன் வீட்டுக்கு வருகிறார். வானதியின் அப்பாவும், அம்மாவும் தாய்மாமா பேச்சைக் கேட்டு பாண்டியனுக்கே வானதியை கல்யாணம் பண்ணிவைத்து விடலாம் என முடிவெடுத்து விடுகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
TV Serials : அதிக நாட்கள் ஓடிய டாப் 10 தமிழ் சீரியல்கள்! 8 வருஷம் ஓடுன அந்த சீரியல் பத்தி தெரியுமா?
Recommended image3
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Related Stories
Recommended image1
மீட்கப்பட்ட வீடு... அண்ணனை டம்மி பீஸ் ஆக்கி நடேசன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
டாப் கியரில் அய்யனார் துணை; டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved