MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • டாப் கியரில் அய்யனார் துணை; டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

டாப் கியரில் அய்யனார் துணை; டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

அய்யனார் துணை சீரியலில் முதலிடத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேஸில் என்னென்ன இடங்களைப் பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 10 Tamil Serial TRP Rating
Image Credit : instagram

Top 10 Tamil Serial TRP Rating

சீரியல்கள் ஹிட் அடிப்பதும் பிளாப் ஆவதும் அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான் தீர்மானிக்கும். சின்னத்திரை சீரியல்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் ஒவ்வொரு வாரம் வெளியிடப்படும். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 6-வது வாரத்திற்கான டிஆர்பி நிலவரம் இன்று வெளியாகி உள்ளது. அதில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொடர்கள் டாப் 10ல் இடம்பிடித்து உள்ளன. வழக்கம்போல சன் டிவி சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இரண்டாவது இடத்தில் கெத்தாக எண்ட்ரி கொடுத்திருக்கிறது விஜய் டிவி தொடர். அந்த டாப் 10 பட்டியலை இங்கே காணலாம்.

25
டாப் 10 சீரியல்கள்
Image Credit : instagram

டாப் 10 சீரியல்கள்

இந்த வாரம் 10வது இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5.44 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலும் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் சரிந்து, 9-ம் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு 5.86 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 6.43 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Related Articles

Related image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
மீட்கப்பட்ட வீடு... அண்ணனை டம்மி பீஸ் ஆக்கி நடேசன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
35
சரிவை சந்தித்த எதிர்நீச்சல் 2
Image Credit : Instagram/SunTV

சரிவை சந்தித்த எதிர்நீச்சல் 2

7-ம் இடத்தை எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் கெத்தாக இருந்த எதிர்நீச்சல் தொடர் இந்த வாரம் சரசரவென சரிவை சந்தித்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலின் இந்த திடீர் சரிவுக்கு அதன் நேரம் மாற்றமே காரணம். அந்த சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பானதால் தான் இவ்வளவு கம்மியான டிஆர்பியை பெற்று இருப்பதாக ரசிகர்கள் சாடுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7.56 டிஆர்பி ரேட்டிங் பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.

45
பின்னுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பெண்ணே
Image Credit : Instagram

பின்னுக்கு தள்ளப்பட்ட சிங்கப்பெண்ணே

5ம் இடத்தில் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை உள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.91 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் கயல் - மருமகள் மகா சங்கமம் உள்ளது. அதற்கு 8.13 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு 8.72 டிஆர்பி கிடைத்துள்ளது.

55
முதலிடத்தை நெருங்கிய அய்யனார் துணை
Image Credit : Instagram/vijaytelevision

முதலிடத்தை நெருங்கிய அய்யனார் துணை

அதேபோல் கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி 2-ம் இடத்தை பிடித்து மாஸ் காட்டி உள்ளது. இந்த சீரியல் ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடத்தை நழுவவிட்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 8.87 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. வழக்கம்போல் இந்தவாரமும் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 9.50 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதன் ஒரு மணிநேர எபிசோடுக்கு இந்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
சன் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம் - ட்ரெண்டிங்காகும் ரசிகர்கள் கோரிக்கை!
Recommended image2
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
மீட்கப்பட்ட வீடு... அண்ணனை டம்மி பீஸ் ஆக்கி நடேசன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved