MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை

Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் உடனான திருமணத்தை திடீரென நிறுத்தி உள்ளார் பார்கவி. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 19 2026, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் திருமணத்தை வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆதி குணசேகரன் திடீரென முடிவெடுத்து நாளைக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம் என கூறுகிறார். ஜனனி ஏதாவது பண்ணிவிடுவாளோ என பயந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் குணசேகரன். இதையடுத்து சக்தி மற்றும் ஜனனியை அழைக்குமாறு ஆதி குணசேகரன் சொல்ல, சக்திக்கு போன் போடும் ஈஸ்வரி, அவரை கல்யாணத்துக்கு வர சொல்லி போனை கட் பண்ணுகிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஜனனியை அழைக்க மறுக்கும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

ஜனனியை அழைக்க மறுக்கும் ஈஸ்வரி

மறுபுறம் ஜனனி, நீ மட்டும் கல்யாணத்துக்கு போயிட்டு வா என சொல்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் சக்தி, போனா ரெண்டு பேரும் தான் போகணும் இல்லேனா போக வேண்டாம் என கூறிவிடுகிறார். மறுநாள் காலையில் வீட்டில் தடபுடலாக கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, ஐயரும் வருகிறார். அப்போது ஹாலில் அமர்ந்திருந்த விசாலாட்சி, இப்படி வீட்டில் விசேஷம் நடக்கையில், சக்தியும் ஜனனியும் இல்லாம இருப்பது ஒரு மாதிரி இருக்கு. அவங்களை வரச்சொல்லு ஈஸ்வரி என சொல்ல, என் புருஷன் கூப்பிடு சொன்னாலும் நான் கூப்பிட மாட்டேன் என கூறிவிடுகிறார்.

Related Articles

Related image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Related image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
35
ஜனனியை தடுத்து நிறுத்தும் கதிர்
Image Credit : youtube/suntv

ஜனனியை தடுத்து நிறுத்தும் கதிர்

கல்யாண வேலைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக ஜனனியும் சக்தியும் ஜோடியாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கின்றனர். அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் கதிர், உனக்கு வெக்கம், மானம், சூடு சொரணை எல்லாம் இருக்கா, போ வெளிய என சொல்கிறார். அப்போது அங்கு வரும் ஆதி குணசேகரன், கதிரை தடுத்து நிறுத்தி, அவர்களை உள்ளே போகச் சொல்கிறார். நல்லது நடக்குற நேரத்துல எதுக்குப்பா சண்டை போடுற என கதிரை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார் குணசேகரன்.

45
பார்கவி கேட்ட கேள்வி
Image Credit : youtube/suntv

பார்கவி கேட்ட கேள்வி

கல்யாணம் அனைவர் முன்னிலையிலும் நடக்க இருந்த நேரத்தில் தர்ஷனிடம் சில விஷயங்களை கேட்க வேண்டும் என பார்கவி கேட்டதும், எந்த நேரத்துல எதைப்பத்தி பேசிக்கிட்டு இருக்க என சத்தம் போடுகிறார் ஆதி குணசேகரன். அதற்கு பார்கவி, இன்னைக்கு பேசலேனா இனி எப்பவும் என்னால பேசமுடியாதுங்க, இவங்கள மாதிரி, வாழ்க்கை முழுக்க என்னால முடங்கிக் கிடக்க முடியாது என ஆவேசமாக கூறுகிறார். அதைக்கேட்டதும் அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள். குறிப்பாக ஈஸ்வரி, பேரதிர்ச்சி அடைகிறார்.

55
ஆடிப்போன ஆதி குணசேகரன்
Image Credit : youtube/suntv

ஆடிப்போன ஆதி குணசேகரன்

பார்கவி தன்னுடைய உரிமைக்காக பேசியதை பார்த்ததும் சந்தோஷப்படுகிறார் ஜனனி. அநேகமாக திருமணத்துக்கு பின் தன்னை வீட்டிலேயே முடக்கி விடாமல் வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பார்கவி கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எது எப்படியோ, பார்கவி தன்னுடைய உரிமைக்காக குரல் கொடுத்துள்ளதால் ஆதி குணசேகரன் கேங் ஆடிப்போய் இருக்கிறது. இதனால் சில பிரச்சனைகளும் வெடிக்க வாய்ப்பு உள்ளது. அதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved