MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • திருமணத்தை நிறுத்திய சேரன்... அதிர்ச்சியில் சந்தா - அய்யனார் துணை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?

திருமணத்தை நிறுத்திய சேரன்... அதிர்ச்சியில் சந்தா - அய்யனார் துணை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?

அய்யனார் துணை சீரியலில் பாண்டியை தொடர்ந்து சேரனும் தன்னுடைய திருமணம் தற்போது வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறார். அதன் பின்னணியில் உள்ள காரணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2026, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayyanar Thunai serial update
Image Credit : youtube/vijaytelevision

Ayyanar Thunai serial update

அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியிடம் தன் வீட்டில் வந்து தன்னை பெண் கேட்குமாறு சொல்லி இருந்த நிலையில், பாண்டி நேராக வானதி வீட்டுக்கு சென்று தற்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்றும், தனது அண்ணன் சேரனுக்கு திருமணம் முடிந்த பின்னரே தானும் திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருக்கிறார். வானதியின் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாண்டியன் இந்த முடிவு வானதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அடுத்ததாக சேரனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கும் வேலையை தொடங்குகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
சந்தா வீட்டில் சோழன் - நிலா
Image Credit : youtube/vijaytelevision

சந்தா வீட்டில் சோழன் - நிலா

சேரன் ஏற்கனவே சந்தாவை காதலித்து வருவதால், அவர்கள் வீட்டில் திருமணம் குறித்து பேச சோழன் மற்றும் நிலா சென்று இருக்கிறார்கள். அப்போது சந்தாவின் அண்ணனிடம் எங்க அண்ணனுக்கும் சந்தாவை பிடித்திருக்கிறது. சந்தாவுக்கும் சேரனை பிடித்திருக்கிறது அதனால் கல்யாணம் செய்து வைத்து விடலாம் எனக் கூறுகிறார். தனக்கு டபுள் ஓகே என சொல்லும் சந்தாவின் அண்ணன், சேரன் தங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளை ஆக வருவது மிகவும் சந்தோஷம் என கூறி உச்சி முகிர்கிறார். இதைக் கேட்டதும் குஷியான சோழன், இதுக்கு மேல என்ன வேணும் அப்போ அண்ணனின் கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணலாம் எனக்கு கூறுகிறார்.

Related Articles

Related image1
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
34
திருமணத்தை தள்ளிப்போடும் சேரன்
Image Credit : youtube/vijaytelevision

திருமணத்தை தள்ளிப்போடும் சேரன்

சோழனும் நிலாவும் சந்தா வீட்டுக்குச் சென்று திருமணம் பற்றி பேசியது சேரனுக்கு தெரியவந்ததை அடுத்து, நேராக சந்தா வீட்டுக்குச் செல்லும் சேரன் அவருடைய அண்ணாவை அழைத்து பேசுகிறார். இப்போதைக்கு சந்தாவை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போற நிலைமையில் தான் இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார் சோழன். இதைக் கேட்டதும் சந்தா கண்ணீர் விட்டு அழுகிறார். எதற்காக கல்யாணத்தை தள்ளிப் போடுகிறீர்கள் என சந்தாவின் அண்ணன் கேட்கிறார். முதலில் உண்மையை சொல்லலாமா வேண்டாமா என தயக்கம் காட்டிய சேரன் இறுதியாக தான் கல்யாணத்தை தள்ளிப் போடுவதற்கான காரணத்தை போட்டு உடைக்கிறார்.

44
உண்மையை போட்டுடைத்த சேரன்
Image Credit : youtube/vijaytelevision

உண்மையை போட்டுடைத்த சேரன்

தற்போதைக்கு தனக்கு திருமணம் வேண்டாம் என முடிவெடுத்ததற்கு காரணமே சோழனும் நிலாவும் தான் என சேரன் சொல்ல, அவங்க என்ன பண்ணாங்க என சந்தாவின் அண்ணன் கேட்கிறார். சோழனுக்கும் நிலாவுக்கும் கல்யாணம் முடிந்து விட்டாலும் அவர்கள் இன்னும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேரும் வரை தான் கல்யாணத்தை தள்ளி போட முடிவு செய்துள்ளதாக சோழன் கூறுகிறார். அப்போது அங்கிருந்த சந்தாவிடம் அதுவரைக்கும் நீ எனக்காக காத்திருப்பியா என சேரன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் கண்ணீருடன் கலங்கி நிற்கிறார் சந்தா. சேரனின் இந்த முடிவு அவருடைய தம்பிகளுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Recommended image2
உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!
Recommended image3
சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!
Related Stories
Recommended image1
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved