தமிழகத்தில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ..! அமித்ஷாவிற்கு அவசர கடிதம் எழுதிய அண்ணாமலை

தமிழகத்தில் அமைதியான நிலை திரும்ப சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு தேவையான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சரகம் வழங்க வேண்டும் என  அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Threat to national security in Tamil Nadu  Annamalai wrote an urgent letter to Amit Shah

பாஜக அலுவலங்களில் தாக்குதல்

கோவை,ஈரோடு,மதுரை என தமிழகத்தின் ஒரு சில இடங்கிளல் பாஜக பிரமுகர்கள் வீடுகள் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில்   இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை தங்கள் தலைமையின் கீழ் அரசு சிறப்பாக கையாண்டு  நடவடிக்கை எடுத்து வருவதற்கு தமிழக பாஜக சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்த பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் மற்றும் பாஜகவினர் மற்றும்   அவர்களது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் புதிதல்ல என்பது உங்களுக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.   

Threat to national security in Tamil Nadu  Annamalai wrote an urgent letter to Amit Shah

PFI அமைப்பினர் காரணமா..?

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ)க்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும்  தமிழ்நாட்டின் சுமார் 11 PFI தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்களிடையே பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருப்பந்தாகவும் கூறியுள்ளார்.  இதன் விளைவாக, பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள், கார்கள், அலுவலகங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு தீ வைப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவினர்  மற்றும் ஆதரவாளர்களால் என சுமார் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையங்களில் காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். 

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

Threat to national security in Tamil Nadu  Annamalai wrote an urgent letter to Amit Shah

தமிழக அரசுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்

 கடந்த ஒரு வாரமாக பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இதுவரை கண்டன அறிக்கை வெளியிடவில்லையென கூறியுள்ளார்.  இதில், வன்முறையில் ஈடுபட்டவர்களை  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஏற்கனவே 24.09.2022 அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்கவும், தமிழகத்தில் அமைதியான நிலை திரும்ப சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு தேவையான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சரகம் வழங்க வேண்டும் என அந்த  கடிதத்தில் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios