MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!

இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!

ஜெயலலிதா பாணியில் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு சுப்ரீம் பவராக ஆக எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப் அதிமுகவிற்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சுமா? அல்லது உட்கட்சிப் பூசலுக்கு வழிவகுக்குமா?

2 Min read
Author : Thiraviya raj
| Updated : Mar 10 2026, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாஜிகளின் முகத்திற்கு நேராக கறார்
Image Credit : our own

மாஜிகளின் முகத்திற்கு நேராக கறார்

தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுக தலைமையில் இருந்து கிளம்பும் தகவல்கள் அறிவாலயத்தையே உற்றுநோக்க வைத்திருக்கின்றன. சீட்டு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைவிட யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் வேகம், அக்கட்சியின் மூத்த தலைவர்களையே கதிகலங்க வைத்துள்ளது.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கும், கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும்  சீட் வாங்கிவிடலாம் எனப் பெரிய பட்டியலோடு எடப்பாடியைச் சந்திக்கச் சென்றால், அங்கே அவர்களுக்குக் கிடைப்பது காரசாரமான பதில்கள் தான்.

"உங்க தொகுதி வேலையை மட்டும் பாருங்க, முதல்ல ஜெயிச்சுட்டு வாங்க... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என முகத்திற்கு நேராக எடப்பாடி பழனிசாமி சொல்லும் ஒற்றை வரி, பல முன்னாள் அமைச்சர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.   மூத்த தலைவர்களின் சிபாரிசுகளை ஓரம் தள்ளிவிட்டு, கட்சியின் கடிவாளத்தைத் தன் கையில் இறுக்கமாகப் பிடித்துள்ளார் எடப்பாடி.

24
எடப்பாடியின் சீக்ரெட் உளவுப்படை
Image Credit : our own

எடப்பாடியின் சீக்ரெட் உளவுப்படை

வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி இந்த முறை எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. பொதுவாக கட்சி நிர்வாகிகள் தரும் ரிப்போர்ட்டை வைத்துத்தான் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். ஆனால், இபிஎஸ் ஒரு படி கீழே போய்,  தன் கைக்கு அடக்கமானவர்களைக் கொண்டு ஒரு ரகசியக் குழுவை அமைத்துள்ளார்.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் போதே, அந்தந்தத் தொகுதிகளில் யாருக்கு சீட்டு கொடுக்க வேண்டும் கணக்கெடுத்து வைத்துள்ளார். இந்த ரகசியப் பட்டியலோடு, தனக்கு அடக்கமானவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட் பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு சீட் உறுதி என்கிறது எடப்பாடி பழனிசாமி வட்டாரம்.

Related Articles

Related image1
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வரப்போகுது.! கவலை வேண்டாம்.! இந்த 5 மாற்றுவழி இருக்கு.!
34
விசுவாசிகளுக்கு க்ரீன் சிக்னல்
Image Credit : our own

விசுவாசிகளுக்கு க்ரீன் சிக்னல்

முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் உறுதி செய்யப்பட்டாலும், மீதமுள்ள தொகுதிகளில் 80% புதுமுகங்களைக் களமிறக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். வெறும் பணத்தை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது ஓபிஎஸ் பக்கம் சாயாமல், எடப்பாடியுடன் நின்ற உண்மையான விசுவாசிகளுக்கு இந்த முறை ஜாக்பாட் அடிக்கப் போகிறது.

44
மாவட்டச் செயலாளர்களுக்கு விழுந்த அடி
Image Credit : google

மாவட்டச் செயலாளர்களுக்கு விழுந்த அடி

மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப்பவர்களே வேட்பாளர்கள் என்ற பழைய மரபை இபிஎஸ் உடைத்தெறிந்துள்ளார். மாவட்டச் செயலாளர்களை மற்ற தொகுதிகளில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இது ஒருபுறம் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தாலும், மறுபுறம் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா பாணியில் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு சுப்ரீம் பவராக ஆக எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். இந்த ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப் அதிமுகவிற்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சுமா? அல்லது உட்கட்சிப் பூசலுக்கு வழிவகுக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Recommended image2
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!
Recommended image3
இந்தியாவுக்கு செக்..! செங்கடலில் துண்டிக்கப்படும் கேபிள்..! மொத்த இணையமும் முடங்கும் அபாயம்..!
Related Stories
Recommended image1
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வரப்போகுது.! கவலை வேண்டாம்.! இந்த 5 மாற்றுவழி இருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved