MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?

'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைக் குழுவின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. க்ளைமாக்ஸ் உட்பட 12 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், படத்தின் நீளம் 3 மணி நேரமாக நீடிக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 11 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முதலமைச்சர் படத்துக்கே இந்த நிலைமையா?! பின்னணியில் பாஜக.!
Image Credit : x

முதலமைச்சர் படத்துக்கே இந்த நிலைமையா?! பின்னணியில் பாஜக.!

தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஒருவழியாக சென்சார் சோதனைகளைக் கடந்து 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குள் படக்குழுவினர் தணிக்கைக் குழுவிடம் (CBFC) பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. படத்தின் அரசியல் வீரியத்தைக் கண்டு மிரண்ட சென்சார் போர்டு, கதையின் போக்கையே மாற்றும் அளவுக்கு பல காட்சிகளைச் சரசரவென வெட்டித்தள்ளியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அரசியல் மற்றும் கட்சி குறிப்புகள் நீக்கம்
Image Credit : KVN Productions, Ram Muthuram Cinemas

அரசியல் மற்றும் கட்சி குறிப்புகள் நீக்கம்

தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகளை நேரடியாகவோ அல்லது குறியீடாகவோ நினைவூட்டும் வகையில் அமைந்திருந்த வார்த்தைகள் மற்றும் சின்னங்கள் முற்றிலும் மியூட் (Mute) செய்யப்பட்டுள்ளன. அதேபோல், நடப்பு அரசியல் சூழலை மிகக் கடுமையாக விமர்சித்து விஜய் பேசும் சில அனல் பறக்கும் வசனங்களின் ஆடியோவும், தேர்தல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் வகையிலான சில உணர்வுப்பூர்வமான வசனங்களும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. நிஜ அரசியல் தலைவர்களின் பெயர்களோடு ஒத்துப் போகும் வகையிலான பெயர்கள் படத்தில் வரும்போது அவை கேட்காதவாறு ஆடியோ கட் செய்யப்பட்டுள்ளது.

36
தேசியக் கொடி மற்றும் அரசு அமைப்புகள் மீதான சாடல்
Image Credit : X

தேசியக் கொடி மற்றும் அரசு அமைப்புகள் மீதான சாடல்

படத்தில் தேசியக் கொடி தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்ததால், அந்த காட்சியின் பின்னணி மற்றும் விபரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டம், காவல்துறை, அரசு பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில முக்கிய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பொது அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை தவறாக சித்தரிக்கும் வசனங்களும் தணிக்கைக் குழுவால் நீக்கப்பட்டுள்ளன.

46
வன்முறை மற்றும் ஆபாச வசனங்களுக்கு விழுந்த கத்தரி
Image Credit : KVN Productions

வன்முறை மற்றும் ஆபாச வசனங்களுக்கு விழுந்த கத்தரி

படத்தில் வரும் பிரம்மாண்டமான அரசியல் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளின் நீளம் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காகக் குறைக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் வன்முறையின் வீரியம் அதிகமாக இருந்ததால், தியேட்டர்களில் பார்க்கும்போது பதற்றத்தை ஏற்படுத்தும் பல 'ஷாட்கள்' (Shots) வெட்டி சுருக்கப்பட்டுள்ளன. திரையில் அதிகமாகத் தெரிந்த இரத்தக் கறைகள், கொடூரமான தாக்குதல் காட்சிகளின் நீளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கதாபாத்திரங்கள் பேசும் கடுமையான சொற்கள் அனைத்தும் 'பீப்' (Beep) செய்யப்பட்டு மியூட் செய்யப்பட்டுள்ளன.

56
க்ளைமாக்ஸ் மாற்றம் மற்றும் 3 மணி நேர ஆட்டம்
Image Credit : KVN Productions

க்ளைமாக்ஸ் மாற்றம் மற்றும் 3 மணி நேர ஆட்டம்

படத்தின் மிக முக்கிய பகுதியான க்ளைமாக்ஸ் காட்சியில் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வசனங்கள் மற்றும் குறியீட்டு சின்னங்களில் சென்சார் போர்டின் உத்தரவுப்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படி சென்சார் போர்டு சரசரவென 12 முக்கிய மாற்றங்களைச் செய்து பல காட்சிகளை வெட்டித்தள்ளிய போதிலும், படத்தின் நீளம் குறையவில்லை. தணிக்கைக்குப் பிறகு 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் (183 நிமிடங்கள்) என உறுதி செய்யப்பட்டுள்ளது.

66
புதிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
Image Credit : Asianet News

புதிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்சார் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளதால், 'ஜனநாயகன்' படத்தின் புதிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என ஒட்டுமொத்த கோலிவுட்டும், விஜய் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜனநாயகன்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
ஜன நாயகன்
விஜய் (நடிகர்)
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Magalir Urimai Thogai Scheme: எல்லா மகளிருக்கும் ரூ.2,500.! புதிய முடிவில் முதல்வர் விஜய்.! ஆடி சீர் கொடுத்து அசர வைக்க முடிவு?!
Recommended image2
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved