நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்
Bonda Mani : நடிகர் போண்டா மணிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் தற்போது நிதியுதவி வழங்கி உள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு செயலிழந்துவிட்டதாகவும், அவர் சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் கடந்த வாரம் சக நடிகரான பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவருக்கு திரையுலகினர் உதவ முன்வருமாரும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து நடிகர் போண்டா மணிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வரும் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தபின் அவர் இதனை கூறினார்.
இதையும் படியுங்கள்... வெந்து தணிந்தது காடு வெற்றி... சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உதவி இருந்தார். அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்த போண்டா மணி, வடிவேலு தன்னிடம் பேசியதில் தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி வடிவேலு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்றும் உறுதியளித்திருந்தார்.
இதுதவிர திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக ரூ,1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். தனுஷ் அனுப்பிய பணம் தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக கூறி அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் போண்டா மணி.
இதையும் படியுங்கள்... தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சத்தை லிஸ்ட் போட்ட சியான்... மும்பையை மெர்சலாக்கிய விக்ரமின் மாஸ் பேச்சு