MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!

பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!

Pandian Stores 2 Serial This Week March 16 to 21 Promo: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 10 லட்சம் ரூபாய் பண விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது! மகன்களிடம் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு பாண்டியன் போட்ட கெடுவால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 15 2026, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Vijay TV Pandian Stores 2 Latest Promo and Spoilers
Image Credit : jiohotstar

Vijay TV Pandian Stores 2 Latest Promo and Spoilers

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores 2) தொடரில், பிரிந்திருக்கும் பாண்டியன் மற்றும் கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி மேற்கொண்ட ரகசியத் திட்டம் இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால், அந்தத் திட்டத்திற்குப் பின்னால் இருந்த உண்மையான உள்நோக்கம் வெளிச்சத்திற்கு வந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27
Pandian Stores 2 Serial Today Episode Twist March 2026
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode Twist March 2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பேரனின் திருமணத்தை நிறுத்தியதால் மகனின் கோபத்திற்கு உள்ளான காந்திமதி வீட்டை விட்டு துரத்தப்பட்டு இப்போது மகள் வீட்டில் ஜாலியாக இருக்கிறார். ஆனால், கதிர் மற்றும் ராஜீக்கு தனக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்தது கோமதி தான் என்ற உண்மை தெரிந்த பாண்டியன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

37
Pandian Stores 2 Gandhimathi plan to unite Pandian and Gomathi
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Gandhimathi plan to unite Pandian and Gomathi

கோமதி எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. மீனா கொடுத்த ஐடியாவும் ஒர்க் அவுட்டாகவில்லை. இந்த நிலையில் தான் காந்திமதி ஒரு பிளான் போட்டார். தங்கள் குடும்பத்தின் மூத்த தூண்களாக இருக்கும் பாண்டியனும் கோமதியும் பேசாமல் இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்பதை உணர்ந்த காந்திமதி, இருவரையும் சகஜமாகப் பேச வைக்க ஒரு தந்திரத்தைக் கையாண்டுள்ளார்.

47
Pandian Stores 2 Latest Twist and Spoilers March 2026
Image Credit : Vijay TV You Tube

Pandian Stores 2 Latest Twist and Spoilers March 2026

அதாவது, தன்னிடம் சொல்லிவிட்டு மீனாவுடன் இணைந்து கோமதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கோயிலுக்கு செல்லும் அவசரத்தில் தனது மொபைல் போனை எடுத்து செல்லவில்லை. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காந்திமதி, அவரது போனை சைலண்ட் மோடில் போட்டதோடு இல்லாமல் போனையும் மறைத்து வைத்தார்.

57
10 Lakhs money issue in Pandian Stores 2
Image Credit : Vijay TV You Tube

10 Lakhs money issue in Pandian Stores 2

இதைத் தொடர்ந்து தனது பேத்தி அரசி, ராஜீ மற்றும் பேரன் கதிர் ஆகியோரிடம் உங்களது அம்மாவை காலையிலிருந்து காணோம் என்று பொய்யை சொல்லி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதற்கான புரோமோவை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. அதன்படி மார்ச் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான இந்த வார புரோமோவில் அம்மாவை காணோம் என்று செந்தில், கதிர் என்று எல்லோரும் பதற்றத்தில் இருக்கின்றனர். இதற்கு முழு காரணமாக இருக்கும் தனது அப்பா பாண்டியனை செந்திலும், கதிரும் மாறி மாறி திட்டி தீர்த்தனர்.

67
Pandian Stores 2 Serial Today Episode Review
Image Credit : Vijay TV You Tube

Pandian Stores 2 Serial Today Episode Review

நான் லவ் மேரேஜ் பண்ணும் போது என்னிடம் பேசவில்லை, நீ லவ் மேரேஜ் பண்ண போது உன்னிடம் பேசவில்லை. எல்லாம், வீம்பு தான் என்று செந்தில் தனது அப்பாவை பேசினார். அப்போது கோமதி வீட்டிற்குள் வரவே, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தான். கோமதியை பார்த்த பாண்டியன், கதிர் மற்றும் செந்தில் இருவரையும் பார்த்து ஏண்டா எவ்வளவு பேச்சு பேசுனீங்க. உங்கள் இருவருக்கும் 2 மாசம் தான் டைம். அதற்குள்ளாக நான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும். அப்படி வரவில்லை என்றால் நடப்பதே வேறு என்று ஸ்ட்ரிக்டா வார்னிங் கொடுத்துள்ளார். அதோடு அந்த புரோமோ வீடியோவும் முடிந்துள்ளது.

77
Pandian Stores 2 Serial This Week March 16 to 21 Promo
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial This Week March 16 to 21 Promo

பாண்டியன் மற்றும் கோமதி ஜோடி மீண்டும் பழையபடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இதற்கு தான் கோமதி இப்படியொரு பிளான் போட்டார். ஆனால், பிளான் சொதப்பியதோடு மட்டுமின்றி கதிர் மற்றும் செந்திலுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது. இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அரசு வேலையில் இருக்கும் செந்தில் இப்போது லஞ்சம் பெற தொடங்கியிருக்கும் நிலையில் அவரது அப்பா கேட்கும் ரூ.10 லட்சம் பணத்தை லட்சம் பெற்றே கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கதிர் என்ன செய்வார், எப்படி ரூ.10 லட்சம் பணத்தை திரும்ப கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் சீனுக்கு வந்த அறிவுக்கரசி... ஆதி குணசேகரன் வீட்டில் வெடித்த புது பிரச்சனை - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கோமதி போனை அபேஸ் பண்ணிய காந்திமதி... பாட்டியின் பலே திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜயா... ஸ்டாப் ஆன மனோஜின் 2ம் திருமணம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved