MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வேற ஒருத்தரோட ஒரே கலர் டிரஸ் போட்டா சும்மா இருப்பீங்களா?" - ஆர்த்தி ரவி போட்ட அதிரடி ஸ்டோரி! யாரை கலாய்க்கிறார் தெரியுமா?

வேற ஒருத்தரோட ஒரே கலர் டிரஸ் போட்டா சும்மா இருப்பீங்களா?" - ஆர்த்தி ரவி போட்ட அதிரடி ஸ்டோரி! யாரை கலாய்க்கிறார் தெரியுமா?

Aarti Ravi Viral Instagram Story About Matching Color:வேறொருவர் உங்களைப் போலவே உடை அணிந்திருந்தால் எப்படி இருக்கும்? என ஆர்த்தி ரவி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. ஜெயம் ரவிக்கு மறைமுகமாக அவர் கொடுத்த பதிலடியா? என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 15 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jayam Ravi and Aarthi Ravi divorce controversy latest
Image Credit : Social Media

Jayam Ravi and Aarthi Ravi divorce controversy latest

ஜெயம் ரவியுடனான விவாகரத்து அறிவிப்பிற்குப் பிறகு, ஆர்த்தி ரவி சமூக வலைதளங்களில் பகிரும் ஒவ்வொரு பதிவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவர் பதிவிட்டுள்ள 'ஒரே கலர் டிரஸ்' குறித்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, யாருக்கோ கொடுக்கப்பட்ட பதிலடி போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aarti (@aarti.ravi)

25
Aarthi Ravi Instagram story about matching outfits
Image Credit : kenishaa Francis instagram

Aarthi Ravi Instagram story about matching outfits

ஆர்த்தி ரவி தனது ஸ்டோரியில், ஆடை மற்றும் நிறம் (Color Matching) குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்லும் போது, அங்கு வேறொருவர் உங்களைப் போலவே அதே நிறத்தில் (Same Color) உடை அணிந்து வந்திருந்தால் சும்மா இருப்பீங்களா? உங்களுக்கு எப்படி இருக்கும்?" என்ற ரீதியில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!

35
Aarthi Ravi viral post on same color dress
Image Credit : X/RaviMohanStudio

Aarthi Ravi viral post on same color dress

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். சில நாட்களுக்கு முன்பே ஜெயம்ரவி என்று இருந்த தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், கடந்த சில மாதங்களாக தனது குழந்தைகளை பிரிந்து மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வருகிறார் ரவிமோகன்.கடந்த ஆண்டே ஆர்த்தி ரவியைப் பிரிவதாக ரவி மோகன் தெரிவித்திருந்தாலும், அவர்களின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் தான் நிலுவையில் உள்ளது. இப்படி இருக்கும்போது இவர்களின் சமூக வலைதள பதிவுகள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை எப்போதும் ஈர்த்து வருகிறது. அப்படி ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

45
Aarthi Ravi cryptic post on Instagram
Image Credit : Google

Aarthi Ravi cryptic post on Instagram

இது யாருக்கான பதிலடி? இந்த ஸ்டோரியைப் பார்த்த ரசிகர்கள், இது வெறும் ஆடை பற்றியது மட்டுமல்ல, இதற்குப் பின்னால் ஏதோ ஒரு உள் அர்த்தம் இருப்பதாகக் கருதுகின்றனர். சமீபத்தில் ஜெயம் ரவி ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் ஒரே நிறத்திலான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதைச் சுட்டிக்காட்டி, ஆர்த்தி மறைமுகமாக அவரைத் தான் சாடுகிறார் என சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பறக்கின்றன.

தனுஷின் 'கர' முதல் சிங்கிள் அவுட்! "வாய ஏ கரசாமி..." மிரட்டலான குரலில் அதிரடி பாடல்; வைரலாகும் வீடியோ! Watch Here

55
சிங்கிள் மாம்' கெத்து!
Image Credit : Google

சிங்கிள் மாம்' கெத்து!

விவாகரத்து சர்ச்சைகளுக்குப் பின், ஆர்த்தி ரவி தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிப்பதையும், தனது ஃபேஷன் மற்றும் பிசினஸில் கவனம் செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வப்போது அவர் பகிரும் இத்தகைய 'கிரிப்டிக்' (Cryptic) பதிவுகள், ஜெயம் ரவி தரப்பிற்கு அவர் வைக்கும் செக் என்றே பார்க்கப்படுகிறது.

காதல் திருமணம்: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார் ஆர்த்தி.இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!
Recommended image2
தனுஷின் 'கர' முதல் சிங்கிள் அவுட்! "வாய ஏ கரசாமி..." மிரட்டலான குரலில் அதிரடி பாடல்; வைரலாகும் வீடியோ! Watch Here
Recommended image3
த்ரிஷா அருகில் இருக்கும் பார்த்திபனின் மகள்! சண்டை முடிஞ்சு போல.. மும்பை திருமணத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved