Asianet News TamilAsianet News Tamil

உடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்….  டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி !! எப்போ தெரியுமா ?

Karunanidhi will dischanrge coming wenesday or thursday
Karunanidhi will dischanrge coming wenesday or thursday
Author
First Published Aug 5, 2018, 9:11 AM IST | Last Updated Sep 19, 2018, 2:47 AM IST


உடல் நலக்குறைவு காரணமாக  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது உடல்நிலையில் அடுத்து ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து வரும் புதன் அல்லது வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் , தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு டாக்டர்கள் தீவிரி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Karunanidhi will dischanrge coming wenesday or thursday

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலை நார்மலுக்கு வந்ததால் பரபரப்பு அடங்கியது.

Karunanidhi will dischanrge coming wenesday or thursday

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அவர் சக்கர நாற்காலியில்  உட்கார்ந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை சீரடைந்து வருவதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அவரது உடல்நிலையில் அடுத்து ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து வரும் புதன் அல்லது வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதந்த தகவலால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios