- Home
- Tamil Nadu News
- பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
விஜயியிடம், தான் எதிர்பார்த்த அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இப்போது தனது அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கிவிட்டார்.

தவெக மீது கொதிப்பில் செங்கோட்டையன்
அதிமுக-வின் தூண்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன், ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தபோது, கொங்கு மண்டலத்தில் தாமரைக்கும், இரட்டை இலைக்கும் பெரிய அடி விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவரை, செயல்வீரர்கள் கூட்டம் என்ற தந்திரத்தையே தவெக-வுக்கு கற்றுக்கொடுத்த ஒரு வித்தகரை, அந்தக் கட்சி நடத்தும் விதம் அவரது ஆதரவாளர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
புஸ்ஸி ஆனந்தின் ‘அதிகார’ ஆட்டம்!
சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், மேடை நாகரிகம் கூட இல்லாமல் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அண்ணனை அவமானப்படுத்துவதா?" என கொங்கு மண்டல ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.
குப்பையில் விழுந்த வேட்பாளர் பட்டியல்?
கொங்கு மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் செங்கோட்டையன், அந்தப் பகுதியில் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்திவிட்டு விஜய்க்கு அழைப்பு விடுத்தால், அங்கு முறையான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதுமட்டுமின்றி, அவர் கொடுத்த வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரைத் தவிர மற்ற அனைத்தையும் தவெக தலைமை கிடப்பில் போட்டுள்ளது.
அதேநேரம் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா என ஒவ்வொருவரும் கொங்கு மண்டல வேட்பாளர் பட்டியலை தனித்தனியாக விஜய்க்கு அனுப்ப, தவெக-வுக்குள் இப்போது "பட்டியல் போர்" நடந்து வருகிறது. தனக்குக் கீழ் வந்த ஆதரவாளர்களுக்கு இன்னும் ஒரு பதவி கூட வாங்கித் தர முடியாத நிலையில், செங்கோட்டையன் கடும் அப்செட்டில் இருக்கிறார்.
ஸ்டாலினுக்குச் சென்ற ரகசியத் தகவல்!
விஜயியிடம், தான் எதிர்பார்த்த அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இப்போது தனது அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கிவிட்டார். "இப்போதைக்கு அவசரப்பட்டு வெளியேற வேண்டாம்; தேர்தல் வரை தவெக-வில் இருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு திமுக-வில் இணைந்துவிடலாம்" என்பதே அவரது தற்போதைய ப்ளான்.
இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்குத் தகவல் பாஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செங்கோட்டையன் தவெக-வுக்குப் போகும்முன்பே அவரை இழுக்க திமுக எவ்வளவோ முயற்சித்தது. அப்போது பிடிகொடுக்காமல் போன செங்கோட்டையனை, இப்போது திமுக சேர்த்துக் கொள்ளுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ஸ்டாலின் தரப்போ இன்னும் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறது. எவ்வளவோ கேட்டுக்கொண்டும் தவிர்த்து செங்கோட்டையன் தவெகவுக்கு சென்று விட்டார் என்கிற கடுப்பில் உள்ள திமுக செங்கோடையனை இனி இணைத்துக் கொள்ளுமா? எனவும் அவரது ஆதரவாளர்கள் தவிப்பில் உள்ளனர்.
