MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 60 தொகுதிகளில் செக்...! அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!

60 தொகுதிகளில் செக்...! அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!

அண்ணாமலையின் இந்த 'கிங் மேக்கர்' அவதாரம் கொங்கு மண்டலத்தில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும்? அதிமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது பாஜக தனது கால்தடத்தைப் பலப்படுத்துமா

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 07 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூட்டை மாற்றும் அண்ணாமலை
Image Credit : Google

ரூட்டை மாற்றும் அண்ணாமலை

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள்  புயலாய் கொங்கு மண்டலத்தை மையம் கொண்டுள்ளன.

சமீபகாலமாக டெல்லி மேலிடத்தின் தீவிர கண்காணிப்பில் இருந்த அண்ணாமலைக்கு, வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பது தலைமை இட்ட கட்டளை. இதற்காக அவருக்குப் பாதுகாப்பான தொகுதிகளாக மொடக்குறிச்சி அல்லது கவுண்டம்பாளையம் ஆகியவற்றை மேலிடம் தேர்வு செய்து வைத்திருந்தது. ஆனால், அண்ணாமலையின் முடிவோ வேறு விதமாக இருக்கிறது.

24
அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்
Image Credit : facebook/ nainar nagendarn and eps

அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்

டெல்லி தலைமையிடம் அண்ணாமலை முன்வைத்த வாதம் மிகவும் தர்க்கரீதியானது. "இந்த முறை நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவது உறுதி. ஆனால், அதிமுக கூட்டணியில் நான் ஒரு எம்.எல்.ஏ-வாக உள்ளே சென்றால், சபையில் என்னால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. கூட்டணி தர்மம் என்ற பெயரில் அதிமுக-வின் செயல்பாடுகளுக்குத் முட்டுக்கட்டை போடவோ அல்லது அவர்களை விமர்சிக்கவோ முடியாத சூழல் ஏற்படும். இது எனக்கு தர்ம சங்கடத்தையே தரும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, கொங்கு மண்டலத்தில் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் பிரசாரப் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

34
கலக்கத்தில் அதிமுக
Image Credit : X/Annamalai

கலக்கத்தில் அதிமுக

அண்ணாமலையின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, கொங்கு மண்டல வேட்பாளர் தேர்வில் அவருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. இதுதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை குறிவைக்கும் தொகுதிகள் அனைத்தும் கடந்த தேர்தல்களில் அதிமுக கோட்டையாகக் கருதப்பட்டவை.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள பாஜக வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் பாஜக-வை ஒரு மாற்று சக்தியாக வளர்க்க அண்ணாமலை திட்டமிடுகிறார். இரட்டைச் சவாரி: கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக-வின் கோட்டையில் ஓட்டை போட அண்ணாமலை முயல்வது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
பாஜகவின் எதிர்கால அரசியல்
Image Credit : Asianet News

பாஜகவின் எதிர்கால அரசியல்

"வெற்றி வேட்பாளர்களை நான் அடையாளம் காட்டுகிறேன்" என்று அண்ணாமலை இறங்கியிருப்பது, வெறும் தேர்தல் பணி மட்டுமல்ல. அது 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலில் பாஜக-வை ஒரு பிரதான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தும் முயற்சி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அண்ணாமலையின் இந்த 'கிங் மேக்கர்' அவதாரம் கொங்கு மண்டலத்தில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும்? அதிமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது பாஜக தனது கால்தடத்தைப் பலப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

TR
Thiraviya raj
அண்ணாமலை பாஜக
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
Recommended image2
30 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!
Recommended image3
ஆட்சியே வேண்டாம்... கட்சி போதும்..! எடப்பாடியின் வில்லங்க வியூகம்..! உச்சகட்ட கோபத்தில் அமித் ஷா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved