MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!

தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அனைத்தும் நடந்துவிட்டதால், ராகுல் காந்தி கடும் அப்செட்டில் இருக்கிறார். இதன் எதிரொலியாக, இந்த முறை தமிழகத் தேர்தல் பிரசாரத்திற்கு அவர் வருவதே கேள்விக்குறியாகியுள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 07 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 திமுக காங்கிரஸ் இடையே தணியாத ‘ஈகோ’ யுத்தம்
Image Credit : x

திமுக- காங்கிரஸ் இடையே தணியாத ‘ஈகோ’ யுத்தம்

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான ‘ஈகோ’ யுத்தம் இன்னும் தணிந்தபாடில்லை. வெளியே கைகோர்த்துச் சிரித்தாலும், உள்ளுக்குள் ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஓடும் பனிப்போர் இப்போது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் உறுதியாகிவிட்டது. ஆனால், இந்த முறை 'கை' குலுக்குவதற்குப் பின்னால் நடந்த கதைகள் சாதாரணமானவை அல்ல. குறிப்பாக, ராகுல் காந்திக்கும் திமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல், வரும் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விவரப்புள்ளிகள்.

25
திமுக-வை வெறுத்த ராகுல்!
Image Credit : x

திமுக-வை வெறுத்த ராகுல்!

இந்த முறை திமுக-வுடன் கூட்டணியே வேண்டாம் என்பதில் ராகுல் காந்தி மிகத் தீவிரமாக இருந்துள்ளார். "அதிகாரப் பகிர்வு இல்லை என்றால் கூட்டணி எதற்கு?" என்பது ராகுலின் வாதம். இதனால்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் கடைசி நிமிடம் வரை, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இழுத்தடிப்பு வேலைகளைச் செய்து வந்துள்ளார். ராகுலின் இந்த 'அடம்' திமுக-வை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

Related Articles

Related image1
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
35
களமிறங்கிய கனிமொழி - பணிந்த டெல்லி!
Image Credit : ANI

களமிறங்கிய கனிமொழி - பணிந்த டெல்லி!

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட கனிமொழி, நேரடியாகச் சோனியா காந்தியிடம் பேசத் தொடங்கினார். தமிழகத்தின் தற்போதைய கள நிலவரம், பாஜக-வின் வளர்ச்சி, மற்றும் நடிகர் விஜய்யின் வருகை என அனைத்தையும் புள்ளிவிவரங்களோடு சோனியாவிடம் கனிமொழி விளக்கியுள்ளார். "திமுக-வுடன் இல்லையென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும்" என்ற உண்மையைச் சோனியா உணர்ந்தார். இறுதியில், "திமுக-வுடன் கூட்டணி இல்லை என்றால் நான் தமிழக விவகாரங்களில் தலையிட மாட்டேன்" என்று சோனியா காந்தி ஒதுங்கிக் கொள்வதாகச் சொன்ன பிறகே, ராகுல் காந்தி தரப்பு இறங்கி வந்துள்ளது.

45
ராஜ்யசபா சீட்: தமிழருக்கே முன்னுரிமை!
Image Credit : Asianet News

ராஜ்யசபா சீட்: தமிழருக்கே முன்னுரிமை!

கூட்டணி உறுதியான பிறகு, காங்கிரஸ் கேட்ட ஒரு ராஜ்யசபா சீட் விவகாரத்திலும் மோதல் வெடித்தது. டெல்லி தலைமை ஒரு வட இந்திய முகத்தை அந்த சீட்டுக்குத் திணிக்க முயன்றது. ஆனால், திமுக தலைமை கறாராக மறுத்துவிட்டது. "தமிழகத்திலிருந்து செல்லும் எம்பி ஒரு தமிழராக, அதிலும் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும்" என்று திமுக நிபந்தனை விதித்தது. வேறு வழியில்லாமல், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருக்கும் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராகுல் தள்ளப்பட்டார்.

55
ராகுலின் 'சைலண்ட்' எதிர்ப்பு!
Image Credit : Asianet News

ராகுலின் 'சைலண்ட்' எதிர்ப்பு!

தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அனைத்தும் நடந்துவிட்டதால், ராகுல் காந்தி கடும் அப்செட்டில் இருக்கிறார். இதன் எதிரொலியாக, இந்த முறை தமிழகத் தேர்தல் பிரசாரத்திற்கு அவர் வருவதே கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை கூட்டணி தர்மத்திற்காக அவர் வந்தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் ஒரே ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு, அடுத்த விமானத்தில் டெல்லி பறந்துவிடத் திட்டமிட்டுள்ளாராம்.

அறிவாலயத்தின் பிடிவாதமும், டெல்லியின் இயலாமையும் சேர்ந்து 2026-ல் எந்த மாதிரியான முடிவைத் தரும் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

About the Author

TR
Thiraviya raj
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு
Recommended image2
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Recommended image3
Now Playing
அதிமுகவின் கடைசி தேர்தலாக இது இருக்கும்....விஜய் இரண்டாவது இடத்தில இருப்பார் ! எம்.பி ஜோதிமணி பேட்டி
Related Stories
Recommended image1
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved