Mar 14, 2025, 6:10 PM IST
Tamil News Live today 14 March 2025: உலக தூக்க தினம் 2025: அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கிய மனித சங்கிலி


2024-25ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று பிற்பகல் முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6:10 PM
உலக தூக்க தினம் 2025: அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கிய மனித சங்கிலி
இன்று உலக தூக்க தினம். தூக்கம் ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்த,
அப்பல்லோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை தொடங்கியுள்ளது.
5:45 PM
சுத்தமான காற்றை சுவாசிக்கும் உலகின் 5 நாடுகள்! அட! இந்த நாடும் லிஸ்ட்ல இருக்கா!
எந்தவித மாசுபாடுமின்றி சுத்தமான காற்றை சுவாசிக்கும் உலகின் 5 நாடுகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க5:43 PM
இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் – கோலி தான் காரணம் – ரிக்கி பாண்டிங்!
Rohit Sharma and Virat Kohli Are the Reason for India's Win in Champions Trophy : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் இந்தியாவின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது, ஆனால் ஆல்-ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
மேலும் படிக்க5:28 PM
Sweet Heart Review: ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' தேறுமா? தேறாதா? ட்விட்டர் விமர்சனம்!
நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில், உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பாப்போம்.
5:16 PM
இந்தியாவால் மட்டும் தான் ஒரே நேரத்தில் 3 வித போட்டிகளுக்கும் அணியை களம் இறக்க முடியும் - ஆஸி. வீரர் புகழாரம்
இந்திய அணியால் மட்டுமே ஒரே நேரத்தில் 3 ஃபார்மட்களுக்கும் அணியை களம் இறக்க முடியும் என ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க5:07 PM
சாக்ஷியின் பேச்சுக்கு கவுண்ட்டர் கொடுத்த ரிஷப் பண்ட்! விழுந்து விழுந்து சிரித்த தோனி!
ரிஷப் பண்ட் தங்கை திருமண விழாவில் கலந்து கொண்ட தோனி மனைவி சாக்ஷி பேச்சுக்கு ரிஷப் பண்ட் கவுண்ட்டர் கொடுத்தார். இதை கேட்டு தோனி பலமாக சிரித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க5:02 PM
எஸ்கே, விஜய்க்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்!
Monisha Blessy acted with Rajinikanth in Coolie Movie : குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோனிஷா, விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க4:58 PM
இனி இந்த காரை ஓட்டுறது ரொம்ப ஈசி! அட்டகாசமான செயல்திறனை வழங்கும் Lexus RZ 550e 2025
டொயோட்டாவின் சொகுசு பிராண்டான லெக்ஸஸ் புதிய RZ எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் உணர்வைத் தரும் இன்டராக்டிவ் மேனுவல் டிரைவ் சிஸ்டம் இதில் உள்ளது.
மேலும் படிக்க4:51 PM
தமிழகத்தில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கப்போகுதாம்! பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் மழைக்குப் பிறகு மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை வானிலை மையம், வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க4:21 PM
27 கிமீ மைலேஜ் கம்மி விலையில் ஆடம்பர தோற்றம்! வெறும் ரூ.1 லட்சத்தில் Maruti Suzuki Celerio 2025
மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான Maruti Suzuki காரின் விலை, மைலேஜ் பற்றி செய்தியில் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க4:21 PM
1000 ஆண்டுகள் பழமையான கோவில்கள் திருப்பணி.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் திருப்பணிகளுக்கு பட்ஜெட்டில்ரூ.125 கோடி ஒதுக்கீடு. இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களை காணலாம்.
4:05 PM
தளபதிக்கு Y பிரிவு பாதுகாப்பு; விஜய் நீலாங்கரை உதவி ஆணையர் நடத்திய முக்கிய ஆலோசனை என்ன?
இன்று முதல் தளபதி விஜய்க்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில், இது குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் பரத் விஜய்யுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
3:32 PM
பினராய் விஜயனை சந்தித்த பிடிஆர்.! தென் மாநில முதல்வர்களை ஒன்று சேர்க்கும் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற மாநில முதலமைச்சர்களு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க3:25 PM
முட்டை முதல் மசாலா வரை; எந்தெந்த பொருட்கள் விலை குறைஞ்சுருக்கு தெரியுமா?
பொருளாதார ஆய்வாளர்கள் சொல்றாங்க, போன வருஷத்தோட ஒப்பிடும்போது இந்த வருஷம் டெய்லி யூஸ் பண்ற மசாலா சாமான்கள் விலை கொஞ்சம் கம்மியா இருக்குன்னு. ஆனா முட்டை விலைதான் ரொம்ப கம்மியா இருக்கு. ரெண்டுமே முறையே 5.85% மற்றும் 3.01% விலை குறைஞ்சிருக்கு.
மேலும் படிக்க3:14 PM
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க3:13 PM
லைசென்ஸ் தேவையில்லை; புதிய மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.49,500 மட்டுமே
ஜலியோ நிறுவனம் லிட்டில் கிரேசி என்ற புதிய குறைந்த வேக மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது RTO பதிவு தேவையில்லாதது மற்றும் மூன்று பேட்டரி வகைகளில் கிடைக்கிறது. இது இளம் ரைடர்களுக்கு ஏற்றது மற்றும் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க3:06 PM
ஐபிஎல்லில் களமிறங்கும் 13 வயது பாலகன்! ரூ.1.10 கோடி ஊதியம்! யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
வைபவ் சூர்யவன்ஷி வெறும் 13 வயதில் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க3:03 PM
திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவிற்கு ஓராண்டு சிறை.! வெளியான அதிரடி தீர்ப்பு
அனுமதியின்றி நிதி பெற்ற வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது. மற்ற நிர்வாகிகளுக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க3:02 PM
Lokesh Kanagaraj Net worth: இயக்குனது 5 படம் தான்; ஆனால் பல கோடிக்கு அதிபதியா மாறிய லோகேஷ் கனகராஜ்!
மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2:58 PM
அட்லீ கேட்ட டூமச் பட்ஜெட்; ஆளவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்?
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பட்ஜெட்டை கேட்டு தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
மேலும் படிக்க2:52 PM
இப்படி பண்ண யாருதான் கார் வாங்காம இருப்பாங்க; லெக்சஸ் RZ 550e-விற்காக எடுத்த புது முயற்சி!
டொயோட்டாவின் ஆடம்பரப் பிரிவான லெக்சஸ், RZ எலக்ட்ரிக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் BEV-யில் மேனுவல் கியர்பாக்ஸின் அனுபவத்தை வழங்கும் இன்டராக்டிவ் மேனுவல் டிரைவ் சிஸ்டம் அடங்கும்.
மேலும் படிக்க2:29 PM
சுவைக்காக மண்பானைல சமைக்குறப்ப 'இந்த' தவறுகளை பண்ணாதீங்க!!
மண்பானையில் சமைக்கிறீர்கள் என்றால் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க2:26 PM
அட்டர் பிளாப் ஆன ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன்; பட்ஜெட் 20 கோடி.. ஆனா வசூல் இவ்வளவுதானா?
ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படமாக கடந்த வாரம் திரைக்கு வந்த கிங்ஸ்டன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து உள்ளது.
மேலும் படிக்க2:02 PM
மூன்றே படத்தில் 3300 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் இந்த நடிகை யார்?
உலக அளவில், ரூ.3300 கோடி வசூலை அள்ளிய திரைப்படங்களில் நடித்து,பாக்ஸ் ஆபிசில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை யார் என்பதை பார்ப்போம்.
1:56 PM
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஜாக்பாட் அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள்!
Government Employee: தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காப்பீடு, கல்விக் கடன் சலுகைகள், குறைந்த வாடகை வீடுகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க1:56 PM
தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!
தமிழகத்தில் தொழில் பூங்காக்கள் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்
மேலும் படிக்க1:49 PM
“பெருசு” காமெடியில் கலக்கினாரா? சொதப்பினாரா? முழு விமர்சனம் இதோ
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ள பெருசு திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
மேலும் படிக்க1:31 PM
ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போது இணைவார்?
ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 முதல் தொடங்கும் நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? என்பது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க1:09 PM
மோடி அரசின் புதிய திட்டம்: மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை!
மோடி அரசு உழைக்கும் மக்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதத்திற்கு வெறும் 55 ரூபாய் செலுத்தி ஓய்வுக்குப் பிறகு 3000 ரூபாய் வரை பெறலாம். இந்த வசதி முக்கியமாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது.
மேலும் படிக்க1:04 PM
பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திர பதிவு.! பதிவு கட்டணம் குறைப்பு- பட்ஜெட்டில் அதிரடி
தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொத்து பதிவில் கட்டண குறைப்பு மற்றும் தொழில் தொடங்க கடன் உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க1:01 PM
அமீர்கானின் புது காதலிக்கு 6 வயதில் குழந்தை இருக்கு; யார் இந்த கெளரி ஸ்ப்ராட்? வயது வித்தியாசம் என்ன?
பாலிவுட் நடிகர் அமீர்கான் ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நிலையில், தன்னுடைய 60வது பிறந்தநாளன்று புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
மேலும் படிக்க12:54 PM
14 வயது பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி! பட்ஜெட்டில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம்!
தமிழக அரசு புற்றுநோய் சிகிச்சை மற்றும் கருப்பை வாய் புற்றுநோயை அகற்ற முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, HPV தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க12:52 PM
மோடி, ட்ரம்ப்-க்கு நன்றி சொன்ன புடின்; உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு காரணமே நீங்க தான்!
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு வாஷிங்டன் முன்மொழிந்த யோசனையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். ஆனால், அதில் சில நுணுக்கங்கள் மற்றும் தீவிரமான கேள்விகள் இருப்பதாக கூறினார்.
மேலும் படிக்க12:51 PM
பலாப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது!!
பலாப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்பட்டாலும், சிலருக்கு இந்த பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று இங்கு காணலாம்.
மேலும் படிக்க12:48 PM
461 கிமீ ரேஞ்ச், அட்டகாசமான ஸ்டைல்! MG ZS EV கார் மீது ரூ.2.05 லட்சம் அதிரடி தள்ளுபடி
MG ZS EV மின்சார கார் பெரும் தள்ளுபடியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 2.05 லட்சம் வரை பலன்கள். இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க12:37 PM
2 ஆயிரம் கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக அரசு மகளிர் தொழில்முனைவோருக்கு ஒரு லட்சம் வரை கடன் உதவி மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது. மகளிர் நலன் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க12:29 PM
Pandian Stores: அரசியின் காதலுக்கு ஆப்பு வைக்க போகும் பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு படத்துக்கு சென்ற அரசியின் காட்சியுடன் தொடங்கி, பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியை பெண் கேட்கும் படலத்துடன் முடிவடைந்துள்ளது இன்றைய எபிசோட்.
12:28 PM
Vivo T3 Ultra vs Motorola Edge 50 Pro: எது சிறந்த ஸ்மாஸ்ட்போன்? எது உங்கள் சாய்ஸ்?
பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.
மேலும் படிக்க12:26 PM
அம்பானி, அதானிக்கு அடுத்து ரோஷ்னி நாடார் டாப்! இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணி!
அப்பா சொத்துல பங்கு கொடுத்ததுல, அம்பானி, அதானிக்கு அடுத்தபடியா ரோஷ்னி இப்ப பெரிய பணக்காரி ஆயிட்டாங்க.
மேலும் படிக்க12:16 PM
ஜியோ ஏர்ஃபைபர் அதிரடி சாதனை: ஒரே காலாண்டில் 85% மார்க்கெட்டை கைப்பற்றியது
ஜியோ ஏர்ஃபைபரின் இந்த அபார வளர்ச்சி, இந்தியாவின் இணைய இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. கிராமப்புறங்களிலும் அதிவேக இணையம் கிடைப்பதால், டிஜிட்டல் இந்தியா கனவு மெய்ப்பட உள்ளது. ஜியோவின் இந்த முயற்சி, இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க12:07 PM
தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?
இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் மன்னனாக கலக்கி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சினிமாவிலும் நடித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க11:46 AM
இவ்ளோ காசுல புது கார் வாங்கலாமே! லம்போர்கினி கார்ல பேபி ஸ்ட்ரோலர் வேறயா?
குழந்தைகளை உட்கார வச்சு தள்ளுற ஸ்ட்ரோலர் இப்போ சாதாரண விஷயம். ரெண்டாயிரம் ரூபாயில இருந்து நாற்பது, ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் ஸ்ட்ரோலர் மார்க்கெட்ல இருக்கு. ஆனா, பிரபலமான கார் பிராண்டான லம்போர்கினி இப்போ பேபி ஸ்ட்ரோலர் லான்ச் பண்ணிருக்காங்க. அதோட விலைய தெரிஞ்சுக்குங்க.
மேலும் படிக்க11:45 AM
Axar Patel: ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக அக்சர் படேல் நியமனம்!
டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை டெல்லி அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க11:41 AM
இன்சல்ட் செய்த நயன்தாரா; மூஞ்சில் அடித்தது போல் பதிலடி கொடுத்த மீனா! பற்றி எரியும் புது சர்ச்சை!
'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனாவை, நடிகை நயன்தாரா இன்சல்ட் செய்ததாக எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து மீனா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
11:41 AM
கூகிள் ஜெமினி லைவ்: ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உரையாடலாம்
கூகிள் நிறுவனம், அதன் ஜெமினி லைவ் அம்சத்தில் இரு மொழி ஆதரவை அறிமுகப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வசதி, பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உரையாடவும், குறுஞ்செய்தி அனுப்பவும் உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க11:38 AM
மக்களே தயாரா? விரைவில் வெளியாகிறது புதிய ரூ.100, 200! அப்போ பழைய ரூபாய் நோட்டு?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வாயன்று, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க11:35 AM
கோவிட் தடுப்பூசி கம்பெனியிடம் டீல் போட்ட பாபா ராம்தேவ்; இந்தியாவே ஆடிப்போச்சு!
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதம், அதார் பூனாவாலாவின் கம்பெனியிடம் இருந்து மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸை வாங்குகிறது. இந்த டீல் மூலம் பதஞ்சலி இனி இன்சூரன்ஸ் துறையில் கால் பதிக்கும்.
மேலும் படிக்க11:29 AM
B.E/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசின் மின்சாரத் துறையில் வேலை
புதுச்சேரி மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 73 காலியிடங்கள்
மேலும் படிக்க11:26 AM
Agniveer: ராணுவத்தில் சேர தயாரா? என்ன செய்ய வேண்டும்... முழு விவரம் இதோ!
அக்னிவீர் திட்டத்தில் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறீர்களா? தமிழகத்தில் எங்கெல்லாம் இதற்கான முகாம் நடைபெற உள்ளது? எப்போது நடைபெறுகிறது என்ற விவரங்களும் இதோ...
மேலும் படிக்க11:18 AM
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வேலை: தேர்வு இல்லை! விண்ணப்பக் கட்டணம் இல்லை
திருப்பூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மேலும் படிக்க11:11 AM
ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம்.!- தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு
தமிழக நிதி நிலை அறிக்கையில் புதிய தொழிற்பூங்காக்கள், மருத்துவமனை மேம்பாடு, மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், புதிய விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க11:00 AM
அமரன் பட இயக்குனருக்கு கிரீன் சிக்னல் காட்டிய தனுஷ்; ஷூட்டிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போ தொடங்கும் என்பது பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க10:52 AM
IPL: பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்! காவ்யா மாறன் அதிருப்தி! SRH கேப்டனாகும் இளம் வீரர்?
காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகினால் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க10:48 AM
கொளுத்தும் கோடை வெயில்; உடல் சூட்டை தணிக்க குடிக்க வேண்டிய '5' பானங்கள்
கோடை வெயிலில் உங்களது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் இந்த 5 பானங்களை குடியுங்கள்.
மேலும் படிக்க10:44 AM
தமிழக பட்ஜெட் 2025-26: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன், அரசு பள்ளிகளில் தரம் உயர்வு
2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் முன்னேற்றம், கல்வி, ஊரக வளர்ச்சி போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தோழி விடுதிகள், மாணவியர் விடுதிகள், கணினி ஆய்வகங்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க10:15 AM
யார் இந்த பிளெடி ஸ்வீட் பாய்? இரண்டே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய இந்த ஜீரோ பிளாப் டைரக்டரா இது?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகிறது.
மேலும் படிக்க10:14 AM
மகளிர் உரிமை தொகை வரிவாக்கம், 25ஆயிரம் புதிய வீடுகள்- பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்ன.?
2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். தொல்லியல் அகழாய்வுகள், அருங்காட்சியகங்கள், கிராம சாலை மேம்பாடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும்.
மேலும் படிக்க10:10 AM
TN Budget 2025: தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்... பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!
TN Budget 2025 - 2026 :தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மேலும் படிக்க9:51 AM
ஓலா ஸ்கூட்டர் வாங்க இது தான் ரைட் டைம்: ரூ.27,750 வரை தள்ளுபடி தராங்க
மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், அதன் பிரபலமான S1 வகை மின்சார ஸ்கூட்டர்களுக்கு வரையறுக்கப்பட்ட நேர ஹோலி ஃபிளாஷ் விற்பனை சலுகைகளை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க9:27 AM
தோனி vs ரோஹித் சர்மா: சிறந்த கேப்டன் யார்? அதிக ரிக்கார்ட்ஸ் வைத்துள்ளது யார்?
ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு பெரும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளனர். இந்த இருவரில் சிறந்த கேப்டன் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க9:15 AM
என்னது 18 கிலோவா? அம்பானி கல்யாணத்தில் தொலைந்த வைரம் - ஃபீல் பண்ணிய பிரபல நடிகை
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி ஜோடியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டபோது தான் வைரத்தை தொலைத்துவிட்டதாக பிரபல நடிகை கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க9:10 AM
காரடையான் நோன்பு 2025: மாங்கல்யம் பலம் அதிகரிக்க மனதார 'இப்படி' வழிபடுங்க!
மாசி மாதத்தில் வரும் காரடையான் நோன்பு பெண்கள் கடைபிடிக்கும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். இந்த நோன்பை கடைபிடிக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க9:01 AM
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஜெயில்ல போடுங்க! சொத்துக்களையும் முடக்குங்க! சொல்வது யார் தெரியுமா?
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்.
மேலும் படிக்க8:59 AM
30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா சம்மதம்! ஆனால் டிரம்புக்கு கண்டிஷன் போட்ட புதின்!
உக்ரைன், ரஷ்யா இடையே 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சில நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.
மேலும் படிக்க
8:50 AM
டிஏ உயர்வு: 7 வருடத்தில் குறைந்தபட்ச அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
பிரதமர் நரேந்திர மோடி அரசு அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வை அறிவிக்கலாம். தற்போதைய நிலவரப்படி, டிஏ 2% மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
8:49 AM
மயிலாடுதுறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று குத்தாலத்தில் நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் படிக்க8:37 AM
Raptee HV30: நம்ம சென்னையில்.. இந்தியாவின் முதல் CCS2 சான்றளிக்கப்பட்ட மின்சார பைக்!
சென்னையைச் சேர்ந்த Raptee HV நிறுவனம் HV30 மின்சார மோட்டார் சைக்கிளுக்கு ARAI சான்றிதழ் பெற்றுள்ளது. இது CCS2 சார்ஜிங் தரத்துடன் சான்றளிக்கப்பட்டுள்ளது, வேகமான சார்ஜிங்கை அனுமதிக்கிறது மற்றும் பரந்த சார்ஜிங் நிலைய அணுகலை வழங்குகிறது.
மேலும் படிக்க8:30 AM
புதுசு கண்ணா புதுசு; இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?
சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி முதல் தம்பி ராமையா நடித்த ராஜாக்கிளி வரை இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க8:27 AM
திமுக அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் பாஜக அரசு.! திருமாவளவன் அதிரடி
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தலித் இளைஞர் கொலை குறித்து பேசிய அவர், அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் படிக்க8:25 AM
சிங்கிள் சார்ஜில் 190 கிமீ ஓடும்! இனி இந்த ஸ்கூட்டர் தான் டாப்பு? Honda Activa EV
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா அதன் மின்சாரப் பதிப்பு தொடர்பான தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. Honda Activa EVயின் விலை மற்றும் ரேஞ்ச் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க8:24 AM
ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!
ரயில்களில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க8:16 AM
வாக்கிங் போறப்ப இந்த '1' விஷயம் மட்டும் சரியா பண்ணா போதும்!! ஆய்வில் தகவல்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 10 ஆயிரம் காலடிகள் நடப்பதை காட்டிலும், நடக்கும்போது சில விஷயங்களை பின்பற்றினாலே போதுமாம்.
மேலும் படிக்க8:10 AM
ட்ரம்பின் மிரட்டல்: ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி - கதறும் உலக நாடுகள்!
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது. நிறுத்தி வைக்கும் காலம் முடிந்த நிலையில், இனி சலுகை இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் படிக்க7:30 AM
திருப்பதி மலையில் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை.! வெளியான ஷாக் தகவல்
திருப்பதி கோவிலில் தனியாக வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க7:30 AM
ஐபிஎல் 2025: விராட் கோலியின் 973 ரன் சாதனையை தூள் தூளாக்கப் போகும் 5 வீரர்கள்!
விராட் கோலியின் 2016 ஐபிஎல் சாதனையான 973 ரன்களை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் இந்த சாதனையை முறியடிக்க சாத்தியமான 5 வீரர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க6:10 PM IST: இன்று உலக தூக்க தினம். தூக்கம் ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்த,
அப்பல்லோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க
அப்பல்லோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை தொடங்கியுள்ளது.