பலாப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது!!
பலாப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்பட்டாலும், சிலருக்கு இந்த பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று இங்கு காணலாம்.

Who Should Not Eat Jackfruit : பலாப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே பளபளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதய நோய், பெருங்கடல், புற்றுநோய் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பழம் மிகவும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பலாப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
பலாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், கார்போஹைட்ரேட்டுகள், மாங்கனீஸ், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. பலாப்பழத்தில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் இது கொழுப்பு அல்லது நிறைவுற்றக் கொழுப்பை குறைக்க உதவும். பலாப்பழம் சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் சிலர் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது. அது அவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். எனவே யாரெல்லாம் பலாபலத்தை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயாளிகள் மறந்தும் கூட பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இந்த பழத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் அவை ரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைத்து விடும். அதுபோல நீரிழிவு நோயாளிகள் அதிகளவு பலாப்பழத்தை சாப்பிட்டால், அது ரத்த சர்க்கரை அளவை கணிச்சமாக குறைத்து விடும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து தான் ஏற்படும். இந்த காரணத்திற்காக தான் பலாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வாமை உள்ளவர்கள்:
உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் நீங்கள் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது. இல்லையெனில், ஒவ்வாமை பிரச்சனை மேலும் அதிகரிக்கும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்கள் ஒருபோதும் பலாப்பழம் சாப்பிட வேண்டாம்.
சிறுநீரக நோய்:
நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் பலாப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பலாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்க செய்யும். இது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள்:
கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. பலாப்பழத்தில் இருக்கும் கரையாத நார்ச்சத்து தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் பலாப்பழம் கரு சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதுபோல பாலூட்டும் பெண்களும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: பாலுணர்வு பிரச்னைக்கு பாலமிடும் பலாப்பழ கொட்டைகள்..!!
அறுவை சிகிச்சை:
அறுவை சிகிச்சைக்கு முன்பு அல்லது பின்பு ஒருபோதும் பலாப்பழத்தை சாப்பிட வேண்டாம். இல்லையெனில், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். அதுபோல அறுவை சிகிச்சை செய்யப் போகிறவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே பலாப்பழத்தை சாப்பிடவே கூடாது.