பாலுணர்வு பிரச்னைக்கு பாலமிடும் பலாப்பழ கொட்டைகள்..!!
நம்முடைய தமிழ் சமுதாயத்தில் முக்கனிகளில் ஒன்றாக பலாப்பழம் உள்ளது. இதனுடைய சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனினும் பலாச்சுளைக்கு உள்ளே இருக்கும் கொட்டையின் நன்மைகள் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகளவில் உருவாகும் பழங்களிலே மிகவும் பெரியது பலா தான். தர்பூசிணி, மஞ்சள் பூஷணி போன்ற காய்கனிகள் இருந்தாலும், பழம் என்கிற தகுதியுடன் அந்த இடத்தை நிறைவு செய்வது பச்சைப் பலாப்பழம் மட்டுமே. தென்னிந்தியாவில் இந்தப் பழம் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. சித்தரையில் இருந்து கோடைக் காலம் முடியும் வரை கிடைக்கும் பலாப்பழம், நம்முடைய தமிழ் பண்பாட்டு கூறுகளில் மிகவும் முக்கியத்துவப்படுகிறது. பலாச்சுளைகளை பலரும் விரும்பி சாப்பிடுவது போல, அதனுள் இருக்கும் கொட்டையை யாரும் சாப்பிட விரும்புவது கிடையாது. அதை அப்படியே சாப்பிட முடியாது என்றாலும், பலாக்கொட்டையை பக்குவமாக சமைத்து சாப்பிட விரும்பி பலரும் மெனக்கெடுவது கிடையாது. ஆனால் நாம் குப்பையில் தூக்கி எறியும் பலாக் கொட்டைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இடம்பெற்றுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
வயோதிகம் ஏற்படாமல் தடுக்கும்
எப்படியும் நமக்கு முதுமை ஏற்படத்தான் போகிறது. ஆனால் இன்றைய காலத்தில் முதுமையை ஏற்படுவதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நம்மில் பெரும்பாலானோர், 30 வயதைக் கடந்து முதுமை வந்தாலும் அல்லது 40-யை கடந்து முதுமை ஏற்பட்டாலும், தனக்கு சீக்கரமாக வயோதிகம் தொடங்குவதாக எண்ணி கவலைப்படுகிறோம். எப்படி முதுமை ஏற்படுவதை தள்ளிப்போடலாம் ? என்று தவிப்பவர்களுக்கு பலாப்பழ கொட்டைகள் சரியான தீர்வை வழங்குகின்றன. இதை நன்றாக ஊற வைத்து, குக்கரில் 5 விசில் விட்டு சாம்பார் வைத்து சாப்பிட்டால் சருமம் பொலிவு பெறும். அதேபோல இதை தேனுடன் அறைத்து பால் கலந்து முகத்துக்கு போட்டு வந்தால், சுருக்கங்கள் சீக்கரம் ஏற்படாது.
மன அழுத்தத்துக்கு நல்லது
பலாப் பழத்திலும் அதனுடைய விதைகளிலும் அதிகளவு மைக்ரோ நியூட்ரியண்டுகள் மற்றும் புரதச் சத்து அடங்கியுள்ளன. இதை நம்முடைய உணவில் அவ்வப்போது எடுத்து வருவதால், சரும நோய்கள் நம்மை அண்டாது. மேலும் இது மனதை அமைதியடையவும் செய்கிறது, இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் கொண்டவர்களுக்கு பலாக் கொட்டைகளை சாப்பிடுவது மருந்தாகவும் இருக்கிறது. தலைமுடியின் வேர்களை உறுதியாக வைத்திருப்பதற்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதற்கும், உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைப்பதற்கும் பலா கொட்டைகளை நம்முடைய உணவுகளில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
கண் பார்வைக்கு நல்லது
பலாப் பழத்தில் இருதய நலனுக்கு தேவையான பொட்டாசியம், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின் பி, உடலுக்கு வேண்டிய செயல்பாடுகளுக்கு செய்யத் தூண்டும் புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு இனிப்பான பழத்தில் இவ்வளவு நன்மைகள் கிடைப்பது பலாப் பழத்தில் தான். இதே அளவான ஆரோக்கிய நன்மைகள் பலாப் பழ கொட்டைகளிலும் கிடைக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ கண் பார்வை பிரச்னைகளை போக்குகிறது. மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து கொண்டால், உடலில் அவ்வப்போது செரிமானம் ஏற்பட்டால் சாப்பிட்டு வரலாம். இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சரும நோய் பிரச்னைகள் நீங்கும்.
மழைக்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?
பாலியல் வாழ்க்கைக்கு சிறந்தது
இன்றைய காலத்தில் பலரிடையே பாலியல் நாட்டம் குறைந்து காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதை போக்குவதற்கு பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள், உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள், மருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். இந்த பிரச்னைகளுக்கு இயற்கை வழங்கியுள்ள தீர்வு தான் பலாப்பழம். இதனுடைய கொட்டைகளில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இதன்மூலம் உடலில் பாலியல் உணர்வு தூண்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. ஆசிய பாரம்பரிய மருத்துவ முறைகளில் பலாப்பழ கொட்டைகள் பாலியல் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கொட்டைகளை நெய்யில் வறுத்து உண்ணும் போது, பாலியல் செயல்பாட்டுக்கு சிறந்த கருவியாக செயல்படுகிறது என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
செக்ஸ் வாழ்க்கை குறித்து நண்பர்களிடம் பேச தயங்கக்கூடாது- காரணம் இதுதான்..!!
கட்டுப்பாடுடன் சாப்பிடுங்கள்
பலாப்பழ கொட்டைகளில் அதிகளவு புரதம் உள்ளது. அதனால் அதை அவ்வப்போது தான் சாப்பிட்டு வர வேண்டும். அளவுக்கு மீறி உடலில் புரதம் சேரும் போது, அதன்காரணமாகவும் பல்வேறு பிரச்னைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. அதேபோல ஒரு 100 கிராம் கொண்ட பலாக் கொட்டைகளில் ஒரு கிராமுக்கு குறைவாக கொழுப்புச் சத்துக்கள் மற்றும் 38 கிராம் கார்போ இடம்பெற்றுள்ளன. அனால் உடல் எடை அதிகமாக கொண்டவர்கள் இதை கட்டுப்பாடுடன் தான் சாப்பிட்டு வரவேண்டும். இந்த கொட்டைகளை சாம்பார், காரக் குழம்பு, கூட்டு, பொரியல் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். கேரளாவில் இந்த கொட்டையினை நன்றாக அரைத்து மாவாக்கி வைத்துக் கொண்டு அல்வா, லட்டு மற்றும் புட்டு செய்தும் சாப்பிடுவார்கள். பலாக் கொட்டைகளை சமைக்கும் போது தேங்காய், சக்கரை மற்றும் நெய் போன்ற பொருட்கள் அளவுடன் பயன்படுத்த வேண்டும்.