- Home
- Cinema
- Pandian Stores: அரசியின் காதலுக்கு ஆப்பு வைக்க போகும் பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
Pandian Stores: அரசியின் காதலுக்கு ஆப்பு வைக்க போகும் பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு படத்துக்கு சென்ற அரசியின் காட்சியுடன் தொடங்கி, பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியை பெண் கேட்கும் படலத்துடன் முடிவடைந்துள்ளது இன்றைய எபிசோட்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நேற்றைய எபிசோடானது அரசி மற்றும் சுகன்யா இருவரும் பேசும் சீனுடன் முடிந்தது. இன்றைய 427ஆவது எபிசோடில் அரசி லீவு அன்றும் கூட காலேஜ் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவர் குமாருடன் இணைந்து ஹோட்டலுக்கு சென்றுவிட்டு படத்துக்கு போவது என்று பிளான் போடப்படுகிறது. அதன்படி படத்துக்கும் கிளம்பியுள்ளனர்.
சினிமாவுக்கு செல்லும் அரசி - குமரவேல்
ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட பிறகு படத்துக்கு செல்கிறார்கள். ஹோட்டல் காட்சியை காட்டப்படவில்லை என்றாலும், ஹோட்டலில் சாப்பிட்டதாக பேசிக் கொள்ளும் காட்சி மட்டுமே இடம் பெறுகிறது. தியேட்டர் வாசல் வரை வந்த அரசி ஒருவித பதற்றத்துடனே இருந்தார். அரசி மற்றும் குமாரவேல் ஆகியோரது காதல் ரொமான்ஸூக்கு இடையூறாக சுகன்யா வந்திருந்தாலும், சுகன்யா இருக்கும் தைரியத்தால் தான் அரசி படத்துக்கு வந்ததாக கூறுகிறார்.
சொத்து பிரிப்பது பற்றி பேச்சை எடுத்த சுகன்யா
கடைசியில் அரசி மற்றும் குமாரவேல் இருவர் மட்டும் படத்துக்கு சென்றுவிட்டார்கள். அந்த தியேட்டருக்கு பக்கத்தில் தான் சரவணன் வேலை விஷயமாக வந்திருக்கிறார். இதையடுத்து சுகன்யா சொத்து பிரிப்பது பற்றி பேச ஆரம்பித்துள்ளார். நேரம் வரும் போது சொத்து பிரிக்கலாம். இன்று இல்லையென்றாலும் கூட என்றாவது ஒருநாள் சொத்தில் பழனிவேலுவிற்கும் பங்கு உண்டு என்று பழனிவேலுவின் அம்மா பேசுகிறார்.
அரசிக்கு வரும் வரன்
இறுதியாக அரசியை பெண் கேட்டு பாண்டியனின் அக்கா கணவர் கடைக்கு வந்துள்ளார். அவர் முதலில் ஜோதிடரிடம் சென்று வேறொரு பெண்ணை, தனது தம்பி சதீஷூக்கு பார்த்ததாகவும், ஆனால், பொருத்தம் இல்லை என்பதால் நேராக பாண்டியனின் கடைக்கு வந்ததாக சொல்கிறார்... பின்னர் அப்படியே அரசியை பெண் கேட்பது போல் பேச்சை துவங்குகிறார். இப்படியான நிலையில், இன்று என்ன நடக்க போகிறது? என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.