Hema Rajkumar: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஹேமாவுக்கு நடந்த அவமானம்; பட வாய்ப்பு தருவதாக ஷாக் கொடுத்த மேனேஜர்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த அவமானம் குறித்து பேசியுள்ளார்.

திரைப்பட நடிகர் - நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. அதிலும், சீரியலில் எதார்த்தமான கதாபாத்திரத்தில்... இல்லத்தரசிகள் மனதை கவரும் விதத்தில் நடிக்கும் குறிப்பிட்ட சில பிரபலங்கள் என்ன சொன்னாலும், எது செய்தாலும் அது அதிக அளவில் கவனிக்கப்படுகிறது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது பாகத்திலும் வாய்ப்பை வழங்கியது
அந்த வகையில் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ், முதல் பாகத்திலும், அதை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்து வரும் மீனாவுக்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலும் ஹேமா ராஜ்குமாருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மீனாவாக அதிகம் பிரபலமான ஹேமா
ஹேமாவை ரசிகர்கள் மத்தியில் மீனாவாக பிரபலமடைய வைத்தது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் என்றாலும், இவர் சின்னத்திரையில் முதலில் அறிமுகமான தொடர் 'சின்னத்தம்பி'.
திரைப்படத்தில் நடிக்க ஹேமாவிற்கு நடந்த ஸ்கிரீன் டெஸ்ட்
இதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்... இவரின் ரோல் கவனிக்கப்படும் விதத்தில் அமைந்தது. இந்த சீரியலில் ஹேமாவை பார்த்த படக்குழு ஒன்று, வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளனர். பின்னர், அவரை கன்ஃபாம் செய்து, சம்பளமும் பேசி உள்ளனர். ஷூட்டிங் துவங்கும் போது நாங்கள் அழைக்கிறோம் என கூறி, ஹேமாவை வீட்டுக்கு அனுப்பினார்களாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைகிறதா? ஹேமா போட்ட ஒற்றை பதிவால்... குழம்பி போன ரசிகர்கள்!
சம்பள விஷயத்தில் நடந்த நிகோசேஷன்
இரண்டு மாதத்திற்கு பின்னர், அந்த படத்தின் தயாரிப்பு மேலாளரிடம் இருந்து இவருக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர்... உங்களின் சம்பளத்தை கொஞ்சம் குறைக்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்க்கு ஹேமா, முடியாது என சொல்ல, அந்த நபர் உன் மூஞ்சுக்கு பட வாய்ப்பு கொடுக்கிறதே பெருசு, இதுல உனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமா? என ஹேமாவை அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
கோபத்தில் கொந்தளித்த மீனா
அவரின் இந்த பேச்சை கேட்டு டென்சன் ஆன, நடிகை ஹேமாவும் என் மூஞ்சிக்கே வாய்ப்பு இல்லனா... உன் படத்துல யாராலயும் நடிக்க முடியாது. என கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டாராம். இந்த தகவலை பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் பற்றி, சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஹேமா ராஜ்குமார் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ஹேமா ராஜ்குமார், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் முதலில் வசந்த் வசி இவருக்கு ஜோடியாக செந்தில் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தற்போது முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் எப்படி இவரின் கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டதோ... அதே போல் இரண்டாவது பாகத்திலும் அதிகம் ரசிக்கப்படும் கேரக்டராக உள்ளது.