மார்பகத்தில் கட்டி... ஆபரேஷன் செய்த பின் ஏற்பட்ட திடீர் வலி! 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை வெளியிட்ட வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடித்து வரும், ஹேமா ராஜ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் வாரம் தோறும், மற்ற சீரியல்களுக்கு டி.ஆர்.பி-இல் செம்ம டஃப் கொடுத்து வரும் சீரியல் என்றால், அது அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் எனலாம்.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு... ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், நடிகை ஹேமா ராஜ்குமார்.
சீரியல் மட்டும் இன்றி, யூ டியூப் ஒன்றையும் துவங்கி அதன் மூலம் தன்னை பற்றியும், சீரியல் குறித்தும், அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்லும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்க்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
hema rajkumar
இந்நிலையில், ஹேமா... விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், தனக்கு மார்பகத்தில் ஒரு கட்டி இருந்ததாகவும், இதற்காக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். ஒவ்வொரு மாதமும் மருத்துவர்கள் செக்கப்புக்கு வர சொன்னார்கள், ஆனால் கடந்த மூன்று மாதமாக நான் செக்கப் போகவில்லை.
கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!
தற்போது கட்டி இருந்த இடத்தில் வலி அதிகமாகி உள்ளதால், செக்கப்புக்கு வந்தேன். பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹார்மோன் சேஞ் காரணமாகவே வலி ஏற்பட்டதாகவும், இப்போது தான் மனம் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன்
மேலும் இந்த வீடியோ மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், உடலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சனையின் காரணம் குறித்து தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.