கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!
குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகியாக மாறியுள்ள அனிகா சுரேந்திரன், நீல நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, அனிகா சுரேந்திரன்... பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இதை தொடர்ந்து, தமிழில் அனிகாவை தான் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தவர். இதில் அஜித்தின் ரீல் மகளாக நடித்ததன் மூலம் ஒரே படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பின்னர் தமிழில் நானும் ரௌடி தான், மித்ரன், விஸ்வாசம், போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டும் இன்றி, குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில்அம்முவாக ஜொலித்தார்.
தற்போது 18 வயதை எட்டியுள்ள அனிகா, தெலுங்கு திரையுலகில் புட்ட பொம்ம என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஹீரோயின் லுக்கில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எப்படியும் தெலுங்கில் இவர் நடித்துள்ள திரைப்படம் வெளியான பின்னர்... முழு நேர நாயகியாக இவர் மாறலாம் என இப்போதே ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
ஹீரோயினாக நடிக்க துவங்கிய பின்னர், அழகும் கவர்ச்சியும் கொந்தளிக்கும் விதமாக இவருடைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் அமைந்துள்ளது.
நீல நிற மேக்சி உடையில்... குட்டி நாயனாகவே மாறி அழகு பொங்கும் தேவதையாக மிளிரும் கியூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.