MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • பிக்பாஸில் இருந்து விலகலா... அடுத்த சீசனுக்கு ‘நாயகன்’ மீண்டும் வருவாரா? - பைனலில் கமல் அளித்த சூசக பதில்

பிக்பாஸில் இருந்து விலகலா... அடுத்த சீசனுக்கு ‘நாயகன்’ மீண்டும் வருவாரா? - பைனலில் கமல் அளித்த சூசக பதில்

கமல்ஹாசன் இந்த சீசன் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே சூசகமாக பதிலளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 23 2023, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் என்கிற வார்த்தையை சொன்னதும் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது கமல்ஹாசன் தான். அந்த அளவுக்கு இந்நிகழ்ச்சி மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு முக்கியமான காரணமாக விளங்கி இருக்கிறார் கமல். இவர் தொகுத்து வழங்கும் விதம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் பிரபலம் ஆனதற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு வரை அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும், அவரை மக்களிடையே கொண்டு சேர்த்த ஒரு களமாகவும் பிக்பாஸ் இருந்து வந்தது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதில் ஒரே ஒரு வாரம் மட்டும் தான் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடந்த 2021-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அந்த ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு

35

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் இந்த சீசன் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாகவும், சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதால், அதிலும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

45

இதனால் பைனலில் இதுகுறித்த அறிவிப்பை கமல் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபற்றி வெளிப்படையாக கமல் எந்த ஒரு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், நேற்றைய பைனல் முடிவின் போது “மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு சென்றார் கமல். இதன்மூலம் தான் அடுத்த சீசனுக்கு தொகுப்பாளராக வருவதை சூசகமாக அறிவித்து விட்டு சென்றுள்ளார் கமல்ஹாசன்.

55

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இதையடுத்து மணிரத்னம், பா.இரஞ்சித், எச்.வினோத், வெற்றிமாறன், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் என ஏராளமான இயக்குனர்கள் கமலிடம் கதை சொல்லி வைத்துள்ளனர். இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கமல் செம்ம பிஸி என்பது தான் கோலிவுட்டின் நிலவரம்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார் அஸிம்!!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Recommended image2
Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!
Recommended image3
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved