MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "தனிமையை உணர்ந்தேன்!" - நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்! சினிமா வாரிசாக இருந்தாலும் இத்தனை வலியா? வைரலாகும் பேட்டி!

"தனிமையை உணர்ந்தேன்!" - நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்! சினிமா வாரிசாக இருந்தாலும் இத்தனை வலியா? வைரலாகும் பேட்டி!

Vikram Prabhu Emotional About Loneliness : விக்ரம் பிரபு தனது சினிமா பயணத்தில் சந்தித்த தனிமை மற்றும் வலிகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். வாரிசு நடிகராக இருந்தாலும் அவர் சந்தித்த சவால்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 15 2026, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விக்ரம் பிரபு
Image Credit : Asianet News

விக்ரம் பிரபு

Vikram Prabhu Emotional About Loneliness : தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி, தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சிறை என்ற படம் தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளங்கள் இருந்தாலும், திரையுலகப் போராட்டத்தில் தான் சந்தித்த தனிமை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

26
சிறையின் வெற்றி விழா:
Image Credit : our own

சிறையின் வெற்றி விழா:

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்,அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சிறை.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் வாரி குவித்து வருகிறது. வணிக ரீதியாக வசூலை வாரி கொடுக்கிறது.

அக்காவின் காலில் விழுந்து கதறிய சந்திரகலா! கார்த்திக்கை பழிவாங்க புதிய 'செண்டிமெண்ட்' டிராமா - 'கார்த்திகை தீபம்' பரபரப்பு திருப்பம்!

36
வெற்றி விழா: - விக்ரம் பிரபு:
Image Credit : our own

வெற்றி விழா: - விக்ரம் பிரபு:

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட 75வது நாள் வெற்றிவிழா நடைபெற்றது. விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த நடிகர். அனைத்து படங்களிலும் அவருக்கென ஒரு தனி சிறப்புடன் நடித்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. என்று இரண்டு நடிகர்களின் வாரிசு தான் விக்ரம் பிரபு. தலைமுறை தலைமுறையாக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

வேற ஒருத்தரோட ஒரே கலர் டிரஸ் போட்டா சும்மா இருப்பீங்களா?" - ஆர்த்தி ரவி போட்ட அதிரடி ஸ்டோரி! யாரை கலாய்க்கிறார் தெரியுமா?

46
தமிழ் சினிமாவில் அறிமுகம்:
Image Credit : our own

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது அழகும் உயரமும் சரியான பாடி கட்டும் இவருக்கு பல வாய்ப்புகளை தேடி கொடுத்து வருகிறது. குறிப்பாக இவர் போலிஸ் கதாபாத்திரத்திற்கு மிகவும் அச்சடித்தால் போல் இருப்பார்.இவர் பெரும்பாலும் எதார்த்தமான மற்றும் ஆக்ஷன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, கபாலி வெள்ளை யானை மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்,இறுகப்பற்று போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் பல படங்கள் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது.

56
டாணாக்காரன்:
Image Credit : 7_screenstudio Instagram

டாணாக்காரன்:

டாணாக்காரன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். ஒரு காவலராக நினைக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞன்சந்திக்கும் கொடுமைகளை பற்றி பேசி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கத இயக்குனர் தமிழ் தான் இந்த டாணாகரன் திரைப்படத்தை கதை எழுதியுள்ளார். தமிழ் முதலில் ஒரு போலீஸ்காரனாகவே இருந்து அதன் பிறகு கதை எடுக்கும் இயக்குனராக மாறிவிட்டார். அப்பொழுது பட்ட கஷ்டங்களை விலகும் படமாக தான் இந்த படம் உருவானது என்றும் ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அவரின் கதைக்கேற்ப விக்ரமின் நடிப்பும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்துள்ளது.

66
விக்ரம் பிரபுவின் பேச்சு:
Image Credit : youtube

விக்ரம் பிரபுவின் பேச்சு:

இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்துக் கொண்டு பேசினார். அவர் "ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும் போது, என் தாத்தா சிவாஜி கணேசன் மற்றும் என் அப்பா பிரபு ஆகியோர், இந்த திரையுலகில் பெற்றிருந்த நற்பெயரை நான் காப்பாற்ற வேண்டும்.என்ற பெரும் பொறுப்பும் ஒருவித பயமும் என்னை சூழ்ந்து கொள்கிறது". நடிகரின் பேரன் மற்றும் மகன் என்னும் ஒரு சூழல் என்னை தாக்குகிறது. நான் தனிமையை மிகவும் அதிகமாக உணர்ந்து இருக்கிறேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தார். நான் ஒரு சினிமா துறையின் வாரிசு என்பதாலும் என்ற ஒரு தனி அடையாளம் கிடைக்கவில்லை என்றும் கவலைப்பட்டார் விக்ரம் பிரபு.

வெளிநாட்டிற்கு வந்து திரும்பிய பிறகு நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன் என் ஆசைக்கு என் அப்பா நான் உனக்கு உதவ மாட்டேன் ஏன் உன் முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டார் அதன் பிறகு 25 படம்‌ நான் நடித்துள்ளேன் அனைத்து படங்களும் என் சொந்த உழைப்பில் முன்னேறி இருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் விக்ரம் பிரபு.நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார். சிறை எனக்கு 25ஆவது படம் என்பதால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் எனது மகிழ்ச்சியை தன் நண்பர்களுடன் விழாவில் பகிர்ந்துள்ளார் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விக்ரம் பிரபு
தமிழ் சினிமா
சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
அக்காவின் காலில் விழுந்து கதறிய சந்திரகலா! கார்த்திக்கை பழிவாங்க புதிய 'செண்டிமெண்ட்' டிராமா - 'கார்த்திகை தீபம்' பரபரப்பு திருப்பம்!
Recommended image2
வேற ஒருத்தரோட ஒரே கலர் டிரஸ் போட்டா சும்மா இருப்பீங்களா?" - ஆர்த்தி ரவி போட்ட அதிரடி ஸ்டோரி! யாரை கலாய்க்கிறார் தெரியுமா?
Recommended image3
பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved