MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pandian Stores 2: காசு விஷயத்தில் செந்தில் மீது சந்தேகப்படும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

Pandian Stores 2: காசு விஷயத்தில் செந்தில் மீது சந்தேகப்படும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது செந்தில் மற்றும் பாண்டியன் உடன் தொடங்கி ராஜீ மற்றும் கதிர் டான்ஸ் முடிகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 12 2025, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pandian Stores

pandian Stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 425ஆவது எபிசோடானது செந்தில் வாடிக்கையாளரின் கொடுத்த பணத்தை எடுத்து வைத்து கொண்டதாக பாண்டியன் குற்றம் சாட்டுகிறார். அரசு வேலைக்கு பணம் தேவைப்படுகிறது என்று எடுத்து வைத்துக் கொண்டதாக அவர் மீது வீண் பழி போடுகிறார். இதனால், வருத்தப்படும் செந்தில் தனது மனைவி மற்றும் அம்மாவிடம் சொல்லி அழுகிறார். அதன் பிறகு கடைக்கு லோடு வருகிறது என்று கடைக்கு சென்றுவிடுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
குமாருடன் காதலில் அரசி

குமாருடன் காதலில் அரசி

இதற்கிடையில் அரசி மற்றும் குமாரு இருவரும் போனில் பேசிக் கொள்கிறார்கள். ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சென்ற தங்கமயிலுக்கு நேரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேனேஜரிடம் சார் 6 மணி, 7 மணியாகிவிட்டது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், மதிய ஷிப்ஃடுக்கு வருகிறவர்கள் இன்று லீவு போட்டாங்க, அதனால், 8 மணி வரையிலும் இருக்க வேண்டும். கஸ்டமர் வந்திருக்காங்க அவர்களை பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

அரசிக்கு ஆப்பு வைத்த குமரன்; பாண்டியன் வார்த்தையால் அதிர்ச்சியில் செந்தில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

34
தங்கமயில் ஆபிசுக்கு வரும் செந்தில்

தங்கமயில் ஆபிசுக்கு வரும் செந்தில்

தனது மனைவி வருவதற்கு லேட் ஆகும் என்று அம்மா சொல்லியதைத் தொடர்ந்து அவர் வேலை செய்வதாக சொன்ன ஆபிஸூக்கு வந்துவிடுகிறார். மேலும், வெளியில் வெயிட் பண்ணுவதாக தங்கமயிலுக்கு போன் செய்கிறார். பயந்து பயந்து வேலை பார்க்கிறார் தங்கமயில். கடைசியாக தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடுகிறார். 

44
கதிரை ஒன் சைடாக காதலித்த காதலி

கதிரை ஒன் சைடாக காதலித்த காதலி

மேலும் கதிரை ஒன்சைடாக காதலித்த காதலி ஒருவர் ராஜீயிடம் வந்து பேசுகிறார். நீங்கள் லவ் மேரேஜா? யார் காதலை புரபோஸ் பண்ணுனது என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். அப்போது அவர்களுக்கு இடையூறாக கதிரும் வந்து ராஜீ அழைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

சினிமாவுக்கு போக சித்தியை தூது அனுப்பும் குமாரு; கோமதியிடம் சிக்கிய அரசி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved