என்னது 18 கிலோவா? அம்பானி கல்யாணத்தில் தொலைந்த வைரம் - ஃபீல் பண்ணிய பிரபல நடிகை
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி ஜோடியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டபோது தான் வைரத்தை தொலைத்துவிட்டதாக பிரபல நடிகை கூறி இருக்கிறார்.

Kim Kardashian Loss Diamond : முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் அவர்களுடைய இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணத்தை கடந்த ஆண்டு நடத்தினார்கள். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடிக்கு 2024-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் கல்யாணம் நடந்தது. இந்த திருமணத்தில் உலகத்துலேயே ரொம்ப ஃபேமஸான ஃபேஷன் இன்ஃப்ளூயன்சரும், நடிகையுமான கிம் கர்தாஷியனும், அவருடைய அக்கா குளோயி கர்தாஷியனும் கலந்துக்கிட்டாங்க.
Kim Kardashian and her sister
'தி கர்தாஷியன்ஸ்' ஷோவோட புது எபிசோடில் கிம்மும், குளோயியும் இந்தியாவுக்கு வந்ததையும், அம்பானி கல்யாணத்தில் கலந்துகொண்டதை பற்றியும் பேசியுள்ளார்கள். அம்பானி யாருன்னே எங்களுக்கு தெரியாது. ஆனா, எங்களுக்கு தெரிஞ்ச காமன் பிரண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தர் ஜுவல்லரி டிசைனரான லோரைன் ஷ்வார்ட்ஸ். அவர்தான் அம்பானி மகன் கல்யாணத்துக்கான நகைகளை டிசைன் செய்திருந்தார். அவர் மூலமாகத்தான் அம்பானி குடும்பம் எங்களை தொடர்பு கொண்டார்கள்.
இதையும் படியுங்கள்... அனந்த் - ராதிகா திருமணத்தில் பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?
Kim Kardashian about anant ambani wedding
கல்யாணத்துக்கு கூப்பிட்டா வருவீங்களான்னு கேட்டாங்க, கண்டிப்பா வருவோம்னு சொன்னோம். அதன் பின்னர் தான் ஒரு கல்யாண பத்திரிக்கை வந்துச்சு. அதோட வெயிட் மட்டும் 18-20 கிலோ இருக்கும். அதை திறக்கும்போதே பாட்டு வந்துச்சு. இதை பார்த்ததும் இந்த கல்யாணத்த எப்படி மிஸ் பண்ண முடியும்னு தோணுச்சு என கிம் கர்தாஷியனும் அவருடைய அக்காவும் கூறி உள்ளனர். கல்யாணத்தில் தங்களுக்கு ஒரு சோகமான சம்பவம் நடந்ததையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
Kim Kardashian loss diamond
அதன்படி அம்பானி மகன் கல்யாணத்தில் கலந்து கொண்டபோது தான் போட்டிருந்த வைர நெக்லஸில் இருந்து ஒரு வைரம் கீழே விழுந்து தொலைந்துபோனதாக கிம் கர்தாஷியன் கூறி இருக்கிறார். அந்த வைரம் எங்க போச்சுன்னே தெரியலயாம். அதை தேடியும் கிடைக்கவில்லையாம். அந்த வைரத்தின் மதிப்பு பல லட்சம் இருக்குமாம். வைரம் தொலைந்துபோனது தனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என கிம் கர்தாஷியன் ஃபீல் பண்ணி சொல்லி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஆனந்த் - ராதிகாவுக்கு முகேஷ் - நீதா அம்பானி வழங்கிய ஆடம்பர பரிசு; தலை சுற்றவைக்கும் விலை!