MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!

அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!

Ajith and Vijay Combined Movies List in Tamil Cinema : விஜய்யும் அஜித்தும் ஒரே காலக்கட்டத்தில் திரையுலகில் அறிமுகமானவர்கள். இவர்களுக்கிடையே இருக்கும் நட்பையும் இவர்கள் இணைந்த நடித்த படத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 23 2026, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அஜித் விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள்
Image Credit : our own

அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள்

Ajith and Vijay Combined Movies List in Tamil Cinema : விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ்நாட்டின் இரண்டு கண்கள் என்ற அர்த்தத்திலேயே உள்ளனர். 80ஸ்களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இவர்களில் போட்டி ஏற்பட்டது.90ஸ்களில் ரஜினி மற்றும் கமல் என்று இவர்களும் போட்டி ஏற்பட்டது.2கேகளில் விஜய் மற்றும் அஜித் என்று சொல்வதை விட தளபதி மற்றும் தல என்பது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.விஜய் மற்றும் அஜித் குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்.

25
நாளைய தீர்ப்பு
Image Credit : our own

நாளைய தீர்ப்பு

இருவரும் அறிமுகம் ஆகிய முதல் தமிழ் திரைப்படம்: 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தனது அப்பாவின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். ஓராண்டுகளுக்கு அளித்து ஒரு புதிய அறிமுகம் தமிழ் சினிமாவுக்கு வருகின்றன அவர்தான் நம் அஜித் குமார். 1993-ம் ஆண்டு 'அமராவதி' படத்தின் மூலம் அஜித்தும் தமிழில் அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் தொடர்ந்து தனது தந்தை இயக்கத்தில் மட்டுமே நடித்துவந்த விஜய், 1995-ம் ஆண்டு வெளியான 'ராஜாவின் பார்வையிலே' மூலம் முதன்முதலாக தனது தந்தையை தவிர்த்து வேறொரு இயக்குநரின் படத்தில் நடித்தார். இதே படத்தில் விஜய்யின் நண்பராக இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார். இருவருக்கும் அப்போதிருந்தே படத்தில் போட்டியிருந்தது.

35
விஜய் V/Sஅஜித்:
Image Credit : our own

விஜய் V/Sஅஜித்:

இது ரஜினி, கமல் ரசிகர்கள் வயதில் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருந்த சமயம். எனவே அப்போதைய இளைஞர்கள் விஜய்க்கும் அஜித்துக்கும் ரசிகர்களாக மாற தொடங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களும், சிறுவர்களும் விஜய், அஜித் என இரு பிரிவுகளாக பிரிந்து தங்கள் விரும்பிய நாயகன்களுக்கு ரசிகர்களாக மாறினர். விஜய் நடிக்கும் படங்களில் ரஜினி ஸ்டைலை கடைப்பிடிக்கத் தொடங்கினார். அதேசமயம் அஜித் வாலி, சிட்டிசன், வில்லன் என வித்தியாசமான வேடங்களில் நடித்து வந்தார். இது அடுத்த ரஜினி விஜய், அடுத்த கமல் அஜித் எனும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் விதைத்தது.விஜய் Vs அஜித் எனும் போக்கை உருவாக்கினார்கள்.

45
தல பொங்கல் V/S தளபதி பொங்கல்:
Image Credit : our own

தல பொங்கல் V/S தளபதி பொங்கல்:

இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் கண்டிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும். அப்பொழுது தமிழ்நாட்டில் பெரும் பூகம்பமே வேடிக்கை அளவிற்கு ரசிகர்களுக்கு கூட்டம் படையெடுக்கும் இவர்களது படங்கள் வந்தால் தல தீபாவளி அல்லது தளபதி தீபாவளி என்றும் கூறுவார்கள். பொங்கலுக்கு வந்தால் தல பொங்கல், தளபதி பொங்கல் என்றும் சொல்வார்கள். ஆனால் படங்களோ அடிச்சு தூள் கொடுப்போம் அளவிற்கு வெளியாகும். ஆனால் இருவருமே வெற்றி பெற மாட்டார்கள் இவர்களுள் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார்கள். அதில் அதிகபட்சமாக விஜய்க்கு தான் வெற்றி வாகை சூடப்படும்.

தனித்துவம் வாய்ந்தவர்கள்: தளபதி மற்றும் தல தமிழ் திரையுலகில் தங்களின் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் மற்றும் வசூல் சாதனை மூலம் ஆட்டிப்படைப்பவர்கள். விஜய் தனது அதிரடி நடனம், பாட்டு, காதல் ரொமான்ஸ் ,நகைச் சுவை ,சென்டிமென்ட், அதிரடியான பேச்சு என கமர்ஷியல் படங்களுக்கும், என என்று அனைத்திலும் பட்டைய கிளப்புவார் என்று சொல்லலாம். அஜித் தனது ஸ்டைலான நடிப்பு, ஆக்சன், பைக் மற்றும் கார் பந்தய ஆர்வம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகவும் தேர்வு செய்து நடிப்பார்.

55
அஜித் மற்றும் விஜய் நட்பு
Image Credit : our own

அஜித் மற்றும் விஜய் நட்பு

அஜித் குமாரும், விஜய்யும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல அஜித் குமார் குடும்பத்தாரும், விஜய் குடும்பத்தாரும் கூட நட்பாகவே இருந்து வருகிறார்கள். ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் சந்தோஷப்படுவார்கள். இருவரும் போன் செய்து பேசிக்கொள்வார்கள். ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.விஜய் என் நண்பர் என்று அஜித் குமார் பல முறை தெரிவித்துள்ளார். விஜய்யும் அஜித்தை தன் நண்பர் என்றே கூறி வருகிறார். இவர்கள் இருவரும் நட்பு மேன்மேலும் வளர வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
அஜித் கார் பந்தயம்
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Recommended image3
என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved