- Home
- Sports
- IPL: பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்! காவ்யா மாறன் அதிருப்தி! SRH கேப்டனாகும் இளம் வீரர்?
IPL: பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம்! காவ்யா மாறன் அதிருப்தி! SRH கேப்டனாகும் இளம் வீரர்?
காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகினால் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

IPL News: Pat Cummins exits, who will be Hyderabad captain? உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் அணிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளின் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத். கடந்த 2024 சீசனில் இறுதிப்போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. கணுக்கால் காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல்லின் ஆரம்பப் போட்டிகளை தவறவிட வாய்ப்பு இருக்கிறது. காலில் காயம் அடைந்த பேட் கமிம்ன்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை.
இப்போது காயத்தில் இருந்து மீண்டும் வரும் அவர் ஐபிஎல் இரண்டாம் பாதியில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் அதிருப்தியில் உள்ளதாகவும், அந்த அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் அபிஷேக் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் 2025: விராட் கோலியின் 973 ரன் சாதனையை தூள் தூளாக்கப் போகும் 5 வீரர்கள்!
அபிஷேக் சர்மா
24 வயதான அபிஷேக் சர்மா தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து தனது அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தவர். கடந்த ஏழு ஆட்டங்களில் 52.14 சராசரியாகவும் 214.70 என்ற மிகப்பெரிய ஸ்ட்ரைக் ரேட்டிலும் 365 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அபிஷேக் சர்மாவுக்கு கேப்டன்சி அனுபவமும் உள்ளது. அதாவது இவர் தனது மாநில அணியான பஞ்சாபை மூன்று வடிவங்களிலும் பல்வேறு போட்டிகளிலும் வழிநடத்தியுள்ளார்.
ஹென்ரிக் கிளாஸன்
இது தவிர ஒரு இந்தியரை கேப்டனாக நியமிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விரும்புவதால் அபிஷேக் சர்மா கேப்டனாக அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் அந்த அணியின் அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாஸனும் கேப்டன் ரேஸில் இருக்கிறார். கிளாசனும் நம்பமுடியாத ஃபார்மில் உள்ளார். தனது கடைசி 7 ஆட்டங்களில், அவர் 71.00 என்ற சராசரியிலும் 126.03 என்ற SR உடன் 426 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களும் அடங்கும். குறிப்பாக சீனியாரிட்டி மற்றும் பரந்த அனுபவம் காரணமாக அவர் அபிஷேக்கை விட சிறந்த தேர்வாக இருக்க முடியும். கிளாசன் தென்னாப்பிரிக்காவை 9 டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாரி புரூக் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடத் தடை! பிசிசிஐ அறிவிப்பு!