MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • விஜய் ரசிகர் டூ முதல்வர் சந்திப்பு.. ஸ்டாலினை சந்தித்த ஸ்பின் ஜோடி.. வருண், வாஷிங்டன் போட்டோஸ் வைரல்!

விஜய் ரசிகர் டூ முதல்வர் சந்திப்பு.. ஸ்டாலினை சந்தித்த ஸ்பின் ஜோடி.. வருண், வாஷிங்டன் போட்டோஸ் வைரல்!

தமிழக வீரர் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஆவார். விஜய்யின் புகைப்படத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 16 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : x

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மற்றும் டி20‍ உலகக்கோப்பையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

24
ஸ்டாலினை சந்தித்த வருண், வாஷிங்டன்
Image Credit : x

ஸ்டாலினை சந்தித்த வருண், வாஷிங்டன்

அப்போது உலக்கோப்பையை இந்திய அணி வெல்ல பங்காற்றியதற்காக இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் ஸ்டாலினுக்கு இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கேப் பரிசளித்தனர். முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் திருவள்ளூவர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். தொடர்ந்து இருவரும் உலகக்கோப்பை நினைவுகளை ஸ்டாலினுடன் பகிர்ந்து கொண்டனர்.

Related Articles

Related image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Related image2
பும்ராவையே ஓரம் கட்டிய 'மிஸ்டரி ஸ்பின்னர்'.. T20 தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி புதிய சரித்திரம்
34
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Image Credit : x

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் சுழற்பந்து இரட்டையர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருடனான மறக்கமுடியாத தருணங்கள். விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் செதுக்கப்பட்ட அவர்களது பயணத்தைப் பற்றி அவர்களுடன் உரையாடியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் வரும் காலங்களில் இன்னும் பல ஆட்ட நாயகன் விருதுகளையும் (match-winning spells), பெருமைமிகு தருணங்களையும் படைக்க வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

44
பவுலிங்கில் கலக்கிய வருண்
Image Credit : Getty

பவுலிங்கில் கலக்கிய வருண்

டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய விக்கெட் டேக்கராக வருண் திகழ்ந்தார். மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அக்சர் படேல் அணியில் இருந்ததால் வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

விஜய்யின் தீவிர ரசிகர்

வருண் சக்கரவர்த்தி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஆவார். விஜய்யின் புகைப்படத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்த நிலையில், அரசியலில் விஜய்க்கு நேர் எதிராக உள்ள ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உலகக்கோப்பையை வென்ற பிறகு, வருண் சக்கரவர்த்தியும், வாஷிங்டன் சுந்தரும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த திருவண்ணாமலைக்கு சென்று 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
சுப்மன் கில், ஹர்சித் ராணாவுக்கு உயரிய விருது.. பிசிசிஐ கெளரவம்.. என்ன அவார்ட் தெரியுமா?
Recommended image2
பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
Recommended image3
காதலியை கரம் பிடிக்கும் குல்தீப் யாதவ்.. வியக்க வைக்கும் மிஸ்டரி ஸ்பின்னரின் சொத்து மதிப்பு!
Related Stories
Recommended image1
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
Recommended image2
பும்ராவையே ஓரம் கட்டிய 'மிஸ்டரி ஸ்பின்னர்'.. T20 தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி புதிய சரித்திரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved