திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவிற்கு ஓராண்டு சிறை.! வெளியான அதிரடி தீர்ப்பு
அனுமதியின்றி நிதி பெற்ற வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது. மற்ற நிர்வாகிகளுக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Manitha Neya Makkal Katci திமுக கூட்டணி கட்சியான மனித மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவஹிருல்லா, இவர் தமுமுக என்ற அமைப்பில் இருந்த காலகட்டமான கடந்த 1997ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதிக்காக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அனுமதியின்றி பணம் பெற்ற வழக்கு
இந்த வழக்கில் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளாக இருந்த ஹைதர் அலி, எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு ஒரு வருட சிறை தண்டனையும்,
உடந்தையாக இருந்த சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பளித்திருந்தது.
ஒரு வருட சிறை தண்டனை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இன்று நீதிம்பதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இதில் ஜவஹிருல்லா உள்ளிட்ட நபர்களுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீதிபதி வேல்முருகன், தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.